தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில்
ஓரிரு நாளாக பலத்த மழை
பெய்தது. வளி மண்டலத்தின் சுழற்சி
காரணமாக பரவலாக மழை பெய்து
வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, தேனி, திருச்சி, கடலூர், ஈரோடு, தஞ்சாவூர், வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட
பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியிலும்
பரவலாக மழை பெய்தது.சென்னையிலும்
வியாழனன்று காலை மழை பெய்தது.
நகரின் ஒரு சில இடங்களில்
திடீர் மழை பெய்து ஓய்ந்தது.
அண்ணாநகர், முகப்பேர், மூலக்கடை, கொடுங்கையூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் காலை
6 மணியளவில் கன மழை பெய்தது.திருவொற்றியூர் பகுதியிலும் மழை பெய்தது. 15 நிமிடங்கள்
மட்டுமே மழை நீடித்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் காலையில் பெய்த மழை குளிர்ச்சியை ஏற்படுத்தியதோடு குளிர்ந்த காற்றையும் சுவாசிக்க செய்தது.இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், ‘‘வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...