ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் ஓராண்டுக்கு மேலாக காலியாக இருந்த பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.ராமநாதபுரம் கல்வி
மாவட்டத்தில் 28 அரசு உயர்நிலை, 34 மேல்நிலை, 13 அரசு உதவி பெறும்
உயர்நிலை, 17 அரசு <உதவி பெறும் மேல்நிலை என, 92 பள்ளிகள் உள்ளன.
பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 36 அரசு உயர்நிலை, 30 மேல்நிலை, 12 அரசு உதவி
பெறும் உயர்நிலை, 11 அரசு <உதவி பெறும் மேல்நிலை என 89 பள்ளிகள்
செயல்படுகின்றன.
இப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் ஆங்கிலத்திற்கு 32 ,
சமூக அறிவியலுக்கு 81 ஆசிரியர் பணியிடங்கள் ஓராண்டுக்கு மேலாக காலியாக
இருந்தன. ஜூனில் நடந்த கலந்தாய்வில் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள்
அதிகரித்தன. மேலும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தாவரவியல், விலங்கியல்,
வேதியியல், இயற்பியல், கணிதம், கணக்கு பதிவியல், வணிகவியல் பாடங்களுக்கு
காலி பணியிடம் ஏற்பட்டது. காலி பணியிடங்கள் ஆசிரியர் தகுதி தேர்வில்
தேர்ச்சியடைந்தவர்கள் மூலம் நிரப்பப்படுமென பள்ளி கல்வித்துறை நான்கு
மாதங்களாக கூறி வந்தது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக இருந்த 245 பணியிடங்களுக்கு
பட்டதாரி ஆசிரியர் செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டனர். தமிழ் ஆசிரியர்
ஒருவர், ஆங்கிலம் 42, கணிதம் 27, அறிவியல் 22 சமூக அறிவியல் பாடத்திற்கு 88
பேர் புதிய ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப
வேண்டுமென பள்ளி கல்வித்துறையை பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...