ஜார்கண்ட மாநிலம் ராஞ்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு
நிறுவனமான சென்டரல் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள
ஜூனியர் ஓவர்மேன், மைனிங் சர்தார், துணை சர்வேயர் பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
ஜூனியர் ஓவர்மேன் - 94
மைனிங் சர்தார் - 238
துணை சர்வேயர் - 15
தகுதி:
மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்
சம்மந்தப்பட்ட பிரிவுகளில் தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க
வேண்டும்.
வயதுவரம்பு:
18 - 33க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
16.10.2014 மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ccl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...