Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நூலகங்களை அணுக சிரமப்படும் மாணவர்கள் - நிலைமை சீராவது எப்போது?

             பாடப்புத்தகம் சார்ந்த தகவல்களோடு, பொது அறிவை வளர்க்கும் விதமாக, பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட நுாலகங்கள், பெரும்பாலும் பூட்டியே கிடப்பதாகவும், புத்தக வாசிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

             கோவை மாவட்டத்தில் 1,888 அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இங்கு, மாணவர்களது எண்ணிக்கைக்கு தகுந்தபடி, நுாலக வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது அறிவு, இலக்கியம், மருத்துவம், குட்டிக் கதைகள், ஆங்கில வழி புத்தகங்கள் என தலைப்பு வாரியாக, பள்ளி நுாலகங்களுக்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான பள்ளிகளில், கலையாசிரியர்களே நுாலகராகவும் பணிபுரிவதாக தெரிகிறது. மாணவர்களது சுய மதிப்பீட்டு திறனை வளர்ப்பதற்காக, வகுப்புவாரியாக வாரந்தோறும் ஒரு பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நுாலகத்துக்கான நேரத்தில், மற்ற பாடங்களே நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நுாலக நேரம் பெயரளவில் மட்டுமே ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தவிர, மற்ற வகுப்பு மாணவர்களை நுாலகத்திற்குள் அனுமதித்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே, புத்தகத்தை படிக்க அனுமதிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் புத்தக வாசிப்பில் மாணவர்கள் ஆர்வம் செலுத்த வழியில்லை.

பாடப்புத்தகத்தை தவிர, பொது அறிவு, வரலாறு, இலக்கிய புத்தகங்களை மாணவர்கள் படித்தால் மட்டுமே பள்ளிக்கல்வி முடித்தபின், உயர்கல்வியில் சாதிக்க முடியும். இதற்கான வாய்ப்பை, அரசு ஏற்படுத்தி கொடுத்தபோதிலும், ஆசிரியர்களது அலட்சியத்தால் மாணவர்களை சென்றடையாமலே போய்விடுகிறது.

பெற்றோர்கள் சிலர் கூறுகையில், "புத்தக வாசிப்பை ஏற்படுத்தவே, பள்ளிகளில், நுாலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புத்தகங்களை மாணவர்களிடம் கொடுக்கவே மறுத்தால், எப்படி வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். இதில், கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு, நுாலக பராமரிப்பு பதிவேடுகளை ஆய்வுசெய்ய வேண்டும்; தவிர, மாணவர்களை நுாலகத்திற்குள் அனுமதிக்காத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive