ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் பணி நியமனங்களில் மாற்றம் வேண்டும் என்ற
கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வள்ளுவர் கோட்டம் அருகில்,ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் பணி
நியமனங்களில் மாற்றம் வேண்டும் என கூறி, ஏழு அமைப்புகளை சேர்ந்தோர், நேற்று
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் வைத்த கோரிக்கைகளில் சில:
* தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில், மதிப்பெண் தளர்வை எதிர்த்து,
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. அதன்பின், அரசு
எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மதிப்பெண் தளர்வின் மூலம்
பணி நியமனம் பெற்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு, உடனே, மேல்முறையீடு
செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் பின்பற்றப்படும் 'வெயிட்டேஜ்'
முறை, முதல் தலைமுறை ஆசிரியர்களை பாதிப்பதால், அதை திரும்ப பெற வேண்டும்.
இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான, காலி பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப
வேண்டும்.
* ஆசிரியர் தகுதித்தேர்வு, பணி நியமன நடைமுறைகளில் தமிழ்நாடு அரசு உரிய,
சீராய்வின் மூலம், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள்
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...