Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கால்நடைத்துறையில் ஆய்வாளர் காலியிடத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை.

          விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கால்நடை ஆய்வாளர் கிரேடு-2 பணிக்காலியிடத்திற்கு தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.     இது தொடர்பாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் துணை இயக்குநரால் (பணியாளர்) கால்நடை ஆய்வாளர் கிரேடு-2 பணிக்காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

             இப்பணியிடத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகிறது.       இப்பணிக்கு பிளஸ்2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 1.7.2013 அன்றைய நாளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியினருக்கு 35 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இதற்கான பதிவு மூப்பு விவரம் வருமாறு:      முன்னுரிமை பிரிவு(ஆதரவற்ற விதவை மட்டும்): எஸ்.டி-அனைத்து பதிவுதாரர்களும், எஸ்.சி.எ-29.8.2012, எஸ்.சி-9.6.1999, எம்.பி.சி-14.3.2001, பி.சி.எம்-19.1.2009, பி.சி-23.6.1999, இதர பிரிவினர்-4.9.2000 வரையிலும்.     மாற்றுத்திறனாளிகள்(இருபாலர்): எஸ்.டி-25.6.1997, எஸ்.சி.எ-3.6.1992, எஸ்.சி-8.6.1989, எம்.பி.சி-30.7.1990, பி.சி.எம்-27.5.1991, பி.சி-6.1.1990, பொது பிரிவு- 24.5.1990 வரையிலும்.   மாற்றுத்திறனாளிகள்(செவித்திறனில்லாதோர் மட்டும்): எஸ்.சி-27.10.1993, எம்.பி.சி-16.9.1993, பி.சி-31.5.1990, இதர பிரிவினர்-17.2.1992 வரையிலும்.     முன்னுரிமையற்றோர்(இருபாலர்): எஸ்.டி-28.6.1996, எஸ்.சி.எ-6.3.1996, எஸ்.சி-6.4.1996, எம்.பி.சி-17.6.1998, பி.சி.எம்-20.7.1998, பி.சி-12.6.1998, இதர பிரிவினர்-30.5.1996 வரையில் பதிவு மூப்பு இருக்க வேண்டும்.

                      எனவே மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் பதிவு மூப்புடையவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்படும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 27-ம் தேதி நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகின்றவர்களின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.   




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive