பிளஸ்2 காலாண்டு ஆங்கில தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த விடைத்தாள்களை மறுநாளே திருத்தி ஒப்படைக்க வேண்டும் என கல்வித்துறை
உத்தவிட்டுள்ளது. இந்த உத்தரவால், ஆசிரியர்கள் கலக்கம்
அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வுகள் கடந்த மாதம் நடந்தன.
உள்ளாட்சி தேர்தல் காரணமாக பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கான ஆங்கிலம்
முதல் நாள் மற்றும் ஆங்கிலம் 2ம் தாள் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
காலாண்டு விடுமுறை நிறைவு பெற்ற நிலையில், இன்றும், நாளையும் ஆங்கிலம்
முதல்தாள் மற்றும் 2ம் தாள் தேர்வுகள் நடக்கின்றன. இத்தேர்விற்கான
விடைத்தாள்களை நாளை மறுதினம் ஆங்கில ஆசிரியர்கள் திருத்தி ஒப்படைக்க
வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால்
மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஏனெனில் ஒரு
ஆங்கில ஆசிரியர் குறைந்தது 700 விடைத்தாள்களையாவது திருத்தி ஒப்படைக்க
வேண்டும்.
அனைத்து பேப்பர்களையும் ஒரே நாளில் திருத்துவது என்பது இயலாத
காரியமாகும். இந்நிலையில் இன்றும், நாளையும் ஆங்கில ஆசிரியர்களுக்கு
பயிற்சி முகாம் நெல்லையில் நடக்கிறது. இம்முகாமில் கலந்து கொள்ள அனைத்து
ஆங்கில ஆசிரியர்களும் நெல்லைக்கு வரும் நிலையில், அவர்கள் பள்ளிக்கு சென்று
விடைத்தாள்களை பெறுவது கூட இயலாத காரியமாகும். கல்வித்துறை யின் திடீர்
உத்தரவை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் ஆங்கில ஆசிரியர்கள் குழப்பத்தில்
உள்ளனர்.இதுகுறித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்ட
நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பிளஸ்2 ஆங்கில விடைத்தாள்களை ஒரே நாளில்
திருத்தி ஒப்படைப்பது என்பது நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்று. அதிலும்
ஆங்கில ஆசிரியர்கள் அனைவரும் நெல்லை பயிற்சி முகாமில் பங்கேற்கும் சூழலில்,
பேப்பர் திருத்த குறைந்தபட்சம் 4 நாட்களாவது வழங்கப்பட வேண்டும்.
முதன்மை
கல்வி அலுவலகமும், தலைமை ஆசிரியர்களும் ஆங்கில ஆசிரியர்களை
நிர்ப்பந்தப்படுத்தினால், மாணவர்களுக்கு உண்மையான மதிப்பெண்கள் கிடைக்காமல்
போகலாம். ஆங்கில ஆசிரியர்களை தொடர்ந்து வலியுறுத்தினால், சங்க செயற்குழுவை
கூட்டி போராட்டம் அறிவிக்கப்படும். ஆங்கில விடைத்தாள்களை திருத்த
ஆசிரியர்களுக்கு வரும் 15ம் தேதி வரை அவகாசம் வழ ங்க வேண்டும்‘‘ என்றனர்.
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நடை முறைகளைப்பற்றியெல்லாம் கவலை கிடையாது.நான்சொல்கிறேன் ,நீ செய்,என்ற மனநிலையில் உள்ளவர்கள்.பிளஸ்2 காலாண்டு ஆங்கில தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த விடைத்தாள்களை மறுநாளே திருத்தி ஒப்படைக்க வேண்டும் என கல்வித்துறை உத்தவிட்டுள்ளது,எந்தவகையில் நியாயம்?
ReplyDelete