'பிரதமர்
நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று, அரசு பள்ளிகளில்
கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர,
பொதுத்துறை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன'
என, அனைவருக்கும் கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கழிப்பறை
வசதி மற்றும் துாய்மையின் அவசியம்
குறித்து, பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதையடுத்த, இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், துாய்மைபடுத்தும் பணிகளும், பல துறைகளில் நடந்து
வருகின்றன. இந்நிலையில், பிரதமரின் கோரிக்கையை ஏற்று, அரசு பள்ளிகளில்,
கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர,
பொதுத்துறை நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக, அனைவருக்கும்
கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
மத்திய, மாநில அரசு நிதியுதவி மூலம் அரசு பள்ளிகளில், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. எனினும், தேவை அதிகமாக உள்ளது.பிரதமரின் அழைப்பை ஏற்று, கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அருகில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி, 50 கழிப்பறைகளையும், இந்திய விமான நிலையங்கள் ஆணையம், 100 கழிப்பறைகளையும் அமைத்து தருவதாக, உறுதி அளித்துள்ளன.இதுபோல், பல நிறுவனங்கள் முன் வருகின்றன. ஆர்வம் உள்ள பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்கள், அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த முன்வர வேண்டும்.இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...