பள்ளியில் வன்முறையை தவிர்க்க காந்திகிராம பல்கலை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.ஆசிரியர்களை தாக்குவது, போதை வஸ்துகளை பயன்படுத்துவது, பாலியல் வன்முறையில் ஈடுபடுவது போன்ற கலாசாரம் பள்ளி மாணவர்களிடம் அதிகரித்து வருகிறது.
துணை வேந்தர் நடராஜன் பேசியதாவது: மாணவர்கள் நாட்டின் சொத்து. பள்ளிகள் ஆலயங்களுக்கு இணையாக கருதப்படுகிறது.
ஜாதி, மதம், இனம், பாலியல், போதை வாஸ்து போன்ற காரணங்களால் பள்ளி வன்முறை ஏற்படுகிறது.இதை தவிர்க்க ஆசிரியர்கள், மாணவர்கள் குழுவாக சேர்ந்து செயல்பட வேண்டும். மாணவர்களை ஒழுக்கத்தோடு வளர்த்தால், பள்ளியில் வன்முறை ஏற்படாது, என்றார். பேராசிரியர்கள் வில்லியம் பாஸ்கர், ரவிச்சந்திரன், மல்லம்மாள், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...