பெண்கள் குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே
லாயக்கானவர்கள் என்ற கருத்து உடைபட்டு வெகுநாட்கள் ஆன நிலையில், தங்களுக்கு
கிடைக்கும் பணி வாய்ப்புகளில், ஆண்களைவிட சிறப்பாக செயல்பட முடியும் என்று
அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
அவர்கள், அந்தப் பணிகளில் ஆண்களைவிட அதிக
திறமைகளையும், அர்ப்பணிப்பையும் காட்டி செயல்படுகிறார்கள். அது Desk
சார்ந்த பணியாக இருக்கட்டும் அல்லது களப் பணியாக இருக்கட்டும் அல்லது வேறு
வகையான பணியாகவும் இருக்கட்டும். பெண்கள், பல்வேறான துறைகளில் தங்களின்
செயல்திறனை நிரூபித்துள்ளனர்.
ஒரு நல்ல பணியை பெறுவது முதல்நிலை முக்கியம்
என்றால், பணிக்கான நல்ல சம்பளம் என்பது இரண்டாம் நிலை முக்கியம்.
திருப்தியான சம்பளம் கிடைக்கும்போதுதான், ஒரு பணியாளரின் மனநிலை
செழுமையடைவதுடன், பணியின் மீதான அர்ப்பணிப்பு உணர்வும் அதிகரிக்கும்.
பெண்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கத்தக்க, சில பொருத்தமான பணிகளை பற்றிய அலசல் இங்கே தரப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தொடர்பு பணி
இன்றைய உலகில், முக்கியத்துவம் மிகுந்த ஒன்றாக
உருவாகிவரும் பணிகளில், பொதுமக்கள் தொடர்பு பணியும் ஒன்றாகும். பொதுமக்கள்
தொடர்பு அதிகாரியாக இருப்பவர், நிறுவன வாடிக்கையாளர்களிடம் ஒரு பயன்மிக்க
தொடர்பை ஏற்படுத்தி, உரையாடலை மேற்கொண்டு, அவர்களை திருப்தி செய்வதற்கான
திட்டங்களை வகுத்து, அவர்களுக்கும், நிறுவனத்திற்குமான தொடர்பு மற்றும்
உறவை சிறப்பாக்கும் பணியை திறம்பட மேற்கொள்ள வேண்டும்.
இப்பணியானது, பிரதானமாக, Desk தொடர்பான பணிதான்
என்றாலும், Press conference உள்ளிட்ட விஷயங்களுக்காக வெளியில் செல்ல
வேண்டியிருக்கும். பிறரை சாந்தப்படுத்தும் அல்லது சம்மதிக்க வைக்கும்
திறன், பொதுவாக ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் உண்டு என்று நம்பப்படுகிறது.
எனவே, இப்பணி பெண்களுக்கு ஏற்றது.
ஆசிரியர் பணி
பெண்களுக்கு உகந்த பணி எது? என்ற கேள்வியை
எழுப்பினால், அதில் சந்தேகம் இல்லாமல், பலரும் முந்திக்கொண்டு வேகமாக
சொல்லக்கூடிய ஒரு பணி எதுவென்றால், அது ஆசிரியப் பணிதான். முக்கியமாக,
திருமணமானப் பெண்களுக்கு இது ஏற்றது.
இத்துறையில் அரசுப் பணி என்பது நல்ல
சம்பளத்தையும், பணி பாதுகாப்பையும் கொண்டதாக உள்ளது. அதேசமயம், பல தனியார்
பள்ளிகளிலும், தகுதிக்கேற்ற முறையில் நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது.
கல்லூரி ஆசிரியர் பணியை எடுத்துக்கொண்டால்(அது அரசுப் பணியாக
இருக்கும்பட்சத்தில்), அங்கே சம்பளம், சலுகை என்ற அம்சங்கள்தான் அதிகம். பல
தனியார் கல்லூரிகளிலும் நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. இதுவொரு
மரியாதைக்குரிய பணியும்கூட.
விமான பணிப்பெண்
ஒரு பெண்ணுக்கு, உலகம் முழுவதையும் சுற்றிவர
வேண்டும் என்ற ஆசை இருந்து, அதற்கான சில அடிப்படை தகுதிகளும் இருந்தால்,
அவர், விமானப் பணிப்பெண் வேலைக்கு முயற்சிக்கலாம். இப்பணியில் அருமையான
சம்பளத்தைப் பெறலாம்.
அதேசமயம், இப்பணிக்குத் தேவையான மனோநிலை,
பொறுமை, உங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்யக்கூடிய திறன்
ஆகியவை உங்களிடம் இருக்க வேண்டும். உள்நாட்டு விமான சேவையைவிட, வெளிநாட்டு
விமான சேவைகளுக்கு மிக அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.
மனிதவளத்துறை மேலாளர்
பொதுவாகவே, பெண்களுக்கு, தகவல்தொடர்பு திறனும்,
முகபாவனைகளை சிறப்பாக வெளிப்படுத்தும் திறனும் இயல்பாகவே நன்கு அமையப்
பெற்றிருக்கும் என்று கூறப்படுவதுண்டு. எனவே, HR மேலாளர் பணி என்பது
பெண்களுக்கு ஏற்ற பணியாக கருதப்படுகிறது.
இப்பணி ஒருவரின் உரையாடல் திறனை
மேம்படுத்துகிறது என்பதோடு, அவரது பணிநிலை வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஒரு
HR மேலாளரின், சரியான பணியாளர் தேர்வு திறனை, அவர் பணிபுரியும் நிறுவனம்
தொடர்ந்து மதிப்பிடும். எனவே, இத்துறையில் ஒருவருக்கு ஆர்வமிருந்தால், அவர்
Human Resource management அல்லது Industrial Relations ஆகிய படிப்புகளில்
ஒன்றை மேற்கொண்டு, பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
யோகா பயிற்சியாளர்
இப்பணி, ஒரு சுவாரஸ்யமும், சந்தோஷமும் நிறைந்த
பணி என்பதோடு, நல்ல வருமானத்தையும் அளிக்கும் பணியாகும். அலுவலகச் சூழலில்,
நாள் முழுவதும் கடும் பணி பளுவில் மூழ்கி, உடலும், மனமும் சோர்வடையும்
நபர்கள், யோகா வகுப்பிற்கு வர விரும்புகிறார்கள். இதன்மூலம் அவர்கள்
புத்துணர்வு பெற முயல்கிறார்கள்.
எனவே, அத்தகைய நபர்களுக்கு ஆறுதலை அளிக்கவும்,
உடல் நலன் குறித்த ஆர்வமும் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இத்துறையில்
தாராளமாக உங்களின் பாதங்களைப் பதிக்கலாம்.
porupudan seiyal paduvathu nallathu
ReplyDelete