உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஏவுகணையான ‘நிர்பய்’ நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
700 முதல் 1000 கிலோ மீட்டர் வரை கொண்ட நீண்ட தூர இலக்குகளை தாக்க வல்ல அதிநவீன ஏவுகணையான ‘நிர்பய்’யை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியதாகும்.
இந்த ஏவுகணையின் முதற்கட்ட சோதனை கடந்த ஆண்டு மார்ச் 12-ந் தேதி நடந்தது. ஆனால் அப்போது ஏவுகணையின் பாதையில் சிறு சிறு விலகல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த சோதனை பாதியிலேயே கைவிடப்பட்டது.700 முதல் 1000 கிலோ மீட்டர் வரை கொண்ட நீண்ட தூர இலக்குகளை தாக்க வல்ல அதிநவீன ஏவுகணையான ‘நிர்பய்’யை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியதாகும்.
இதைத்தொடர்ந்து தரம் மேம்படுத்தப்பட்ட நிர்பய் ஏவுகணை, நேற்று ஒடிசாவின் சந்திப்பூர் அருகே உள்ள பாலாசோர் கடற்கரையில் சோதித்து பார்க்கப்பட்டது. அதன்படி ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் அமைக்கப்பட்டிருந்த நடமாடும் செலுத்து வாகனத்தில் இருந்து நிர்பய் ஏவுகணை செலுத்தப்பட்டது.
காலை 10.03 மணிக்கு நடந்த இந்த சோதனையின் போது 700 கி.மீ.க்கு அப்பால் வைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாக சென்று தாக்கியது. ஏவுகணை தனது தூரத்தை 1 மணி 13 நிமிட நேரத்தில் கடந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த சோதனையின் போது, ஏவுகணையின் செயல்பாடுகள் அனைத்தும் ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டதாகவும், அப்போது அனைத்து நோக்கங்களையும் ஏவுகணை பூர்த்தி செய்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 அடுக்குகளை கொண்ட நிர்பய் ஏவுகணை, எதிரிகளின் ரேடார் கண்களால் கண்டறிய முடியாதபடி மறைந்து செல்லக்கூடியது. இதில் அமைக்கப்பட்டு உள்ள முதல் என்ஜின் மூலம் ஏவுகணை செங்குத்தாக செல்லும். பின்னர் அதில் உள்ள 2-வது என்ஜின், இலக்கை நோக்கி ஏவுகணையை செலுத்தும்.
இந்த ஏவுகணையை தரைவழி, கடல் வழி (கப்பல் மூலம்), வான்வழி (விமானம் மூலம்), நீருக்கடியில் இருந்து (நீர்மூழ்கி கப்பல் மூலம்) என அனைத்து வழிகளிலும் செலுத்த முடியும்.
மிகவும் துல்லியமாக தாக்கும் திறன் வாய்ந்த நிர்பய் ஏவுகணை, அமெரிக்காவின் ‘டொமாகக்’, பாகிஸ்தானின் ‘பாபர்’ போன்ற ஏவுகணைகளுக்கு சவால் விடக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நிர்பய் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த ராணுவ அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நிர்பய் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இது நமது பாதுகாப்பு திறன்களுக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது’ என்று கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...