மாணவர்கள், மதிப்பெண் சார்ந்த படிப்பு மட்டுமின்றி, சிந்தனை திறனையும்
வளர்த்துக் கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நூலகங்களுக்கு முக்கியத்தும் அளித்து, நூலகர் பணியிடம் உருவாக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்தவும், வரலாறு, புவி யியல் போன்ற அனைத்து துறை சார்ந்த அடிப்படை அறிவை பெற, புத்தக வாசிப்பு திறனை வளர்க்கும் நோக்கத்திலும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், நூலகங்கள் அமைக்கப்பட்டன. அந்தக்காலத்தில், வாரத்தில் ஒரு பாடவேளை நூல கத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நூல கங்கள் உள்ளனவாஎன்பதே சந்தேகத்துக்குரியது. திருப்பூர் மாவட்டத்தில், 96 உயர்நிலை மற்றும் 87 மேல்நிலைப்பள்ளிகள் <உள்ளன. லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். மதிப்பெண் அடிப்படையில் கல்வி கற்பதை தவிர்த்து, கருத்துக்களை புரிந்து படிப்பதற்காக கல்வித்துறை சார்பில் பல்வேறு பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளி படிப்பை கடந்து, மேற்படிப்பு மற்றும் பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ளும்போது தடுமாற்றம் அடைகின்றனர். பாடங்களை தவிர, பிற துறை சார்ந்த அடிப்படை அறிவு மற்றும் வரலாறு உட்பட மற்ற விஷயங்களில் தேர்ச்சி பெறாமால் இருப்பதே இதற்கு காரணம். பள்ளி வயது முதலே சமூகம் சார்ந்த சிந்தனை, பொது அறிவில் மாணவர்கள் சிறந்த விளங்க வேண்டும் என்பதற்காகவே நுல கங்கள் அமைக்கப்பட்டன. பெரும்பாலான பள்ளிகளில், நூலகங்கள் இருக்கும் அறைகள் கூட மாண வர்களுக்கு தெரியாத நிலை உருவாகியுள்ளது. சில பள்ளிகளில், நூலக நேரத்தையும், ஆசிரியர்கள் பாடம் நடத்தவே பயன்படுத்துவதாக, பெற்றோர் புகார் கூறுகின்றனர். கல்வி ஆர்வலர்கள் கூறுகையில், "ஆசிரியர்கள், தேர்வுகளின்போது வேறுவழி யின்றி நூலக பாட வேளையை பயன்படுத்துகின்றனர். நூலகங்களில் என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்பதை கூட மாணவர்கள் அறிவதில்லை. பொது அறிவு மற்றும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்துகொள்வ தில், மாணவர்கள் பின் தங்கியுள்ளனர். வாசிப்பு பழக்கம் குறைந்துள்ளதே, இதற்கு காரணம். மாணவர் களிடம் புத்தக வாசிப்பை தூண்டுவது ஆசிரியர்கள் கடமை. இதற்கு பள்ளிகளில் நூலகர் பணியிடம் உருவாக்க வேண்டும்,' என்றனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...