Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் : தற்போதைய நிலை தொடர மதுரை ஐகோர்ட் உத்தரவு

                 அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து தாக்கலான வழக்கில், 'தற்போதைய நிலை தொடர வேண்டும்' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

           ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி ராமர் தாக்கல் செய்த மனு: நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி. இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 64.23 மதிப்பெண் பெற்றேன். இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுத்தது.

                'அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 669 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளது. காலிப்பணியிடம் எதுவும் இல்லை,' என ஆக.,21ல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நியமனங்களில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை. ஆதிதிராவிடர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என விதிகளில் குறிப்பிடவில்லை. இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டிருந்தால், எனக்கு வேலை கிடைத்திருக்கும். ஆசிரியர்களை (669 பேர்) நியமித்ததாகக்கூறி வெளியான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் வி.சசிக்குமார் ஆஜரானார்.

                    நீதிபதி உத்தரவு: பணி நியமனங்களைப் பொறுத்தவரை, தற்போதைய நிலை தொடர வேண்டும். பள்ளிக் கல்வித் துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அக்., 14 ல் பதில் மனு செய்ய, நோட்டீஸ் அனுப்பப்படுகிறது




4 Comments:

  1. ஆதிதிராவிடர் நலத்துறை என்பது ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டவைதானே.பல நூறு ஆண்டுகளாக பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இச்சமூக மக்களுக்காக தொலைநோக்குப்பார்வையோடு உருவாக்கப்பட்டவைதான் இத்துறை.இத்துறையில் உள்ள அனேக பணியிடங்கள் பிற இன மக்களைக்கொண்டுதான் நிரப்பப்படுகிறது.இதனால் இத்துறையின் நோக்கம் பயனற்று போய்கொண்டிறுக்கிறது.பிற இனமக்களால் நிரப்பப்பட்ட இடத்தில் ஆதிதிராவிட மக்களைக்கொண்டு நிரப்பியிருந்தால் இம்மக்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்திருக்கும். சமூக சமத்துவமும் முன்னேற்றம் அடையும்.இம்மக்களின் வாழ்வாதாரமாக உள்ள இத்துறை பணியிடத்தில் அனைத்து சமூக இனத்தவரும் உட்புகுந்தால் எப்படி இச்சமூகம் மக்கள் முன்னேற்றம் அடைவர்.பிற சமூகத்தவர்கள் அரசுப்பணி பெற பல துறைகள் உள்ளன.அங்கு போட்டியிட்டு அரசுப்பணி பெறலாமே.ஏற்கனவே இத்துறையில் உள்ள பல பணியிடங்கள் பறிபோய்கொண்டிருக்கிறது.மற்ற துறைகளில் பல பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமலேயே உள்ளன.இவர்களின் பணியிடங்களை பிற சமூகத்தினர் ஆதிதிராவிடர்கள் என்று சாதி சான்றிதல் பெற்று பணியேற்றுவரும் சூழலும் உள்ளது.இப்படி இவர்களின் உரிமைகளை பலர் பறித்து தெருவில் விடப்படுகிறார்கள்.மிச்சமிருப்பதோ இடை நிலை ஆசிரியர் பணிமட்டுமே அதையும் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை.பட்டம் பெற்ற பலர் அரசுப்பணி கிடைக்காமல் அவதிப்பட்டுக்கொண்டுதான் உள்ளனர்.இவர்களின் உரிமையை தட்டிப்பறிக்காதீர்கள். பிற சமூகத்தினர் பல தலைமுறைகளாக கல்விபெற்று பொருளாதார,சமூக உரிமை பெற்று தலை நிமிர்ந்து வாழ்கிறார்கள்.இச்சமூக மக்களும் தலை நிமிரட்டுமே.இதற்கு கல்வி பெற்றால் மட்டும் போதாது அதோடு பொருளாதாரமும் பெற்றால் தான் சாத்தியம்.இதற்காக அவர்களின் வாழ்வாதாரமான அரசுப்பணிவாய்ப்பை தட்டிப்பறிக்காதீர்கள். இதற்கு,அரசு இனிமேலாவது இத்துறை பணிவாய்ப்புகளைஆதிதிராவிடர்களைக் கொண்டே
    நிரப்பவேண்டும்.

    ReplyDelete
  2. 90 above candidates around 8,000 among the 11,000 got the post. At present remaining 7,000 those who attended first C.V. want to file a case against the weightage system. G.O.71 and 5% relaxation. Majority of them didn't know how to file the case and didn't have the hope to spend money for this!! They are below poverty and they are not able to file the case also.. Those who want to file a case consider these 7000 also and file a common case for all. Then only everybody will get benefit. And most important the case also will be strengthen by the majority. The 7000 people those who are the victim of 5% RELAXATION AND G.O.71 will raise their voice against the injustice, SUPREME COURT will hear this.
    So consider them and add their name also. If majority of the people join in the case as a group the money for the lawyer also we can share and give that also will be very low for each and every candidate. Everybody can join the case and we surely win the case. Consult your lawyer and we all above 90 candidates must join together and give our address phone number to your lawyer. PLEASE CONSIDER THIS.....
    Mr. ALAN ALI , MR. VENKAT VENKAT, MR. RED FIRE please contact me through my email ksitharam21@gmail.com

    ReplyDelete
  3. ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆதிதிராவிடர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும். ஆதிதிராவிடர்களின் முன்னேற்த்திற்காக உருவாக்கப்பட்ட நலப்பள்ளிகளில் பிற இனத்தவர்களை பணியில் அமர்த்துவது வேதனைக்குரிய செயலாகும். இன்றளவும் பின்தங்கிய நிலையில் தாழ்த்தப்பட்ட ஆதிதிராதிடர்கள் படித்துவிட்டும் வேலை இல்லாமல் இரக்கின்றனர். அவர்களுக்குரிய இட ஒதுக்கீட்டு பணியில் பிற பிற்படுத்தப்ட்ட இனத்தவர்களை பணியில் அமர்த்துவது துரோகம் ஆகும். இதற்காக பாடுபட்டு உருவாக்கிய ஆதிதிராவிடர் பள்ளிகள் யாருக்காக துவங்கப்பட்டனவோ அவர்களுக்காகவே அர்ப்பணிக்க வேண்டும்.

    ReplyDelete
  4. Samathuvam valara annaithu privuvinarukum pani vazhanga vendum.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive