உத்தரப்பிரதேச
மாநில அரசு மாணவர்களுக்கு இலவசமாக
அளித்த லேப்-டாப்கள் இணையத்தில்
அமோகமாக விற்கப்படுவது தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில்
2012 ஆம் ஆண்டு அகிலேஷ் யாதவால் துவங்கப்பட்ட இந்த 'இலவச மடிக்கணினி'
திட்டத்தின் மூலம் மொரதாபாத் மாவட்டத்தில்
ரூ. 19,000 மதிப்புள்ள 24, 143 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளி ஆய்வாளர்
சர்வன் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை திறம்பட பயன்படுத்த இலவசமாக
வழங்கப்படும் மடிக்கணினிகள் இணையத்தில் விற்கப்படுவது தெரியவந்துள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்
ஒருவர் இலவச மடிக்கணினியை இணையம்
மூலம் ரூ.14,000 க்கு விற்றபோது இது
தெரியவந்தது.
இது குறித்து தெரிவித்த மாவட்ட பள்ளி ஆய்வாளர்
சர்வன் குமார் யாதவ், இச்சம்பவம்
குறித்து முறையான விசாரணை மற்றும்
நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்கள் இலவச மடிக்கணினிகளை விற்பதை
மாநில அரசு தடுப்பது சுலபமல்ல.
வேண்டுமானால், மாணவர்களிடம் இலவசமாக வழங்கப்பட்ட லேப்-டாப்பை அவர்களின் வருங்காலத்தை
ஒளிமயமாக அமைத்துக்கொள்ள பயன்படுத்தும்படி அறிவுரை வழங்கலாம்' என
கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...