சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்துள்ளதாலும், தங்களிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு, ஈரானும், சவுதி அரேபியாவும், போட்டி போட்டு தள்ளுபடி அறிவித்துள்ளதாலும், பெட்ரோல், டீசல் விலை விரைவில் கணிசமாக குறைக்கப்பட உள்ளது.
சர்வதேச சந்தை:ஐரோப்பிய நாடுகள் பலவற்றில், தற்போது பொருளாதார மந்த நிலை நிலவுவதால், அந்நாடுகளில், எரிபொருட்களின் தேவை குறைந்து, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறைந்துள்ளது. மேலும், சீனா, தங்கள் நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளது.
அத்துடன், ரஷ்யா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நாடுகளும், தற்போதும், கச்சா எண்ணெய் உற்பத்தியை துவக்கி, அவையும் சர்வதேச சந்தைக்கு விற்பனைக்கு வரத் துவங்கி உள்ளன. அதனால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்கள் கடும் வீழ்ச்சி கண்டுள்ளன. ஜூன் மாதத்திற்குப் பின், 20 சதவீதம் வரை விலை குறைந்துள்ளது.
எனவே, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு, பெட்ரோல், டீசல் விற்பனையில், தற்போது இழப்பு இல்லாத நிலைமைஉருவாகி உள்ளது.அதனால், இந்த விலை குறைப்பை, நுகர்வோருக்கு வழங்க, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. இந்த வாரத்தில், பெட்ரோல் விலை, லிட்டருக்கு ஒரு ரூபாய் வரை குறைக்கப்படலாம். அதேநேரத்தில், அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில், சட்டசபை தேர்தல் முடிந்ததும், டீசல் விலையும், லிட்டருக்கு, 3 ரூபாய் வரை குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.டீசல் விலை, 3 ரூபாய் குறைக்கப்பட்டால், அது, சரக்கு கட்டணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புக்கு உதவும்.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறையும் போது, நாட்டின் இறக்குமதி செலவு குறையும். அதனால், அதிக அளவிலான அன்னியச் செலாவணி வெளிநாடுகளுக்கு செல்வது தடுக்கப்பட்டு, மத்திய அரசின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறையும்.கட்டுப்பாடுஏற்கனவே டீசலால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு, மாதம், 50 காசுகள் என்ற ரீதியில் விலையை உயர்த்தியதன் மூலம் சரிக்கட்டப்பட்டு விட்டது. தற்போது, டீசல் விற்பனையில், லிட்டருக்கு, 2.50 ரூபாய் அதிகமாக கிடைக்கிறது. அதனாலும், டீசல் விலை குறைக்கப்பட உள்ளது.அதேநேரத்தில், பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை கைவிட்டது போல, டீசல் மீதான விலை கட்டுப்பாட்டை கைவிடும் விவகாரத்தில், மத்திய அரசு அவசரப்பட்டு முடிவு எடுக்காது. வரும் நாட்களில், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரங்களைப் பொறுத்தே, பொறுமையாக முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தாண்டுகளுக்கு பின் குறைகிறதுl டீசல் விலை குறைக்கப்பட்டால், அது, ஐந்தாண்டுகளுக்கு பின், நிகழும் முதல் விலை குறைப்பாக இருக்கும்.l சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, கடந்த, 27 மாதங்களில் இல்லாத அளவுக்கு கணிசமாக குறைந்துள்ளது.l அரியானா மற்றும் மகாராஷ்டிராவில், வரும், 15ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், டீசல் விலையை. மத்திய அரசு குறைக்க முடியாது. அப்படி குறைப்பது, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிய செயலாகும். ஏனெனில், டீசல் மீதான விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு கைவிடவில்லை. அதனால், தேர்தலுக்கு பின், விலை குறைக்கப்படலாம்.*பெட்ரோல் விலை, இம்மாதம் 1ம் தேதி, லிட்டருக்கு 54 காசுகள் குறைக்கப்பட்டது.*நம்நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.*கடந்த ஆண்டில், 110 டாலர் அளவுக்கு உயர்ந்த கச்சா எண்ணெய் விலை, தற்போது, 90 டாலராக குறைந்துள்ளது.*இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான், பெட்ரோல், டீசல் விலையானது, கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளது. ஆனால், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலையானது, இந்தியாவில் தான் குறைவாக உள்ளது. அதற்கு, காரணம் மத்திய அரசு மானியம் வழங்குவதே.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...