Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய அரசு துறையில் அதிகாரி பணி: யுபிஎஸ்சி.

         மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
        பணி: மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஹிசார் கால்நடை தீவன உற்பத்தி நிலையத்தில் கிராமப் பொருளாதார வல்லுநர்.
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400. வயது
வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வேளாண்மை அல்லது கிராமப் பொருளியல் துறையில் முதுகலை பட்டம் அல்லது தாவரவியல் அல்லது விலங்கியல் அல்லது வேதியியல் துறையில் பிஎஸ்சி பட்டம் மற்றும் பால்பண்ணை, கால்நடை தீவன தயாரிப்பு துறையில் எம்.எஸ்சி பட்டத்துடன் சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  
2. நுகர்வோர் விவகாரத் துறையின் கீழ் உள்ள நேஷனல் டெஸ்ட் ஹவுசில் விஞ்ஞானிகள்
காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல் துறையில் எம்எஸ்சி அல்லது மெக்கானிக்கல் அல்லது மெட்டாலர்ஜிக்கல் இன்ஜினியரிங் துறையில் பி.இ., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  
பணி: மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் காலியிடங்கள்: 18

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மருத்தவத்துறையில் எம்பிபிஎஸ் பட்டத்துடன் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: மக்கள் நல்வாழ்வு இயக்ககத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் பரிசோதனை நிலையத்தில் பயோ கெமிஸ்ட்
காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: உயிர் வேதியியல் அல்லது நுண்ணுயிரியல் அல்லது ஆர்கானிக் வேதியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் எம்.எஸ்சி., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  
பணி: மைசூரில் உள்ள மத்திய இந்திய மொழிகள் நிறுவனத்தில் 6 பேராசிரியர்கள் மற்றும் ஜூனியர் ரிசர்ச் அதிகாரிகள்
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மொழியியல் பாடத்தில் முதுகலை பட்டம் மற்றும் இந்திய மொழிகளில் தனித்திறன். சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  
பணி: மைசூரில் உள்ள இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தில் வங்க மொழி விரிவுரையாளர்கள் காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000. வயது வரம்பு: எஸ்சி பிரிவினருக்கு 40க்குள்ளும், ஒபிசி பிரிவினருக்கு 38க்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: மொழியியல் அல்லது வங்க மொழியில் முதுநிலை பட்டம். வங்க மொழியில் தனித்திறன் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  
பணி: புனேயில் உள்ள மேற்கு மண்டல மொழி மையத்தில் மராத்தி விரிவுரையாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000.
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மொழியியல் அல்லது மராத்தி பாடத்தில் முதுகலை பட்டம் மற்றும் மராத்தி மொழியில் தனித்திறன் பெற்றிருக்க வேண்டும்.  
பணி: பாட்டியாலாவில் உள்ள வடக்கு மண்டல மொழி மையத்தில் பஞ்சாபி விரிவுரையாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6000.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மொழியியல் அல்லது பஞ்சாபி பாடத்தில் முதுகலை பட்டம் மற்றும் பஞ்சாபி மொழியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  
பணி: மைசூரில் உள்ள தென் மண்டல மொழி மையத்தில் மலையாள விரிவுரையாளர்
காலியிடங்கள்: 01.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6000.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மொழியியல் அல்லது மலையாளம் பாடத்தில் முதுநிலை பட்டம். மலையாளத்தில் தனித்திறன் பெற்றிருக்க வேண்டும்.  
பணி: மைசூரில் உள்ள கிழக்கு மண்டல மொழி மையத்தில் ஒரியா விரிவுரையாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000. வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மொழியியல் அல்லது ஒரிய மொழியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அசாம் சட்டமன்ற அலுவல் மொழிகள் குழுவில் உதவியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  
பணி: ஒரிய சட்டப்பேரவை அலுவல் மொழிகள் குழுவில் உதவியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  
பணி: பஞ்சாபி சட்டப்பேரவை அலுவல் மொழிகள் குழுவில் உதவியாளர்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
தகுதி: சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2014. மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive