ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைகால தடை. மதுரை கிளை உத்தரவு
அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.அதில் கூறி இருப்பதாவது:–
அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் 669 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளன. இதேபோல் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 64 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளது.
அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் 669 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளன. இதேபோல் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 64 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளது.
அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை பொருத்தமட்டில் ஆதிதிராவிடர், அருந்ததியினர் ஆகிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த காலி பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. அரசியல் அமைப்பின் சட்டப்படி இட ஒதுக்கீட்டு முறையில் பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும். இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாமல் அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்புவது நியாயமற்றது. எனவே மேற்கண்ட பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு இன்று வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆறுமுகம் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
tet pass panna candidate ku private school vacant therunjuka ethathu panunga admin sir. private school la jion pana ethethu web site thanga sir
ReplyDeleteTet pass with relaxiation .shall we join minority school sir
ReplyDeleteசுடலைமனி நீ கடலைமனினு பெயரை மாத்திக்கோ.உனக்கெல்லாம் வேலையே கிடைக்காது.
DeleteADW selection list eppo poduvaanga admin sir?
ReplyDeleteIntha thadai eppo remove aagum? Plz Yaaravathu sollunga.
ReplyDeleteDear பாடசாலை, இந்த கேஸ் நிலவரம் எந்த நிலையில் உள்ளது என்று சொல்ல முடியமா ? இது எப்போது முடியும். இரண்டாவது பெயர் பட்டியல் எப்போது வரும்.?
ReplyDelete