மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, அரசு உதவி டாக்டர் பணிக்கான
போட்டித் தேர்வில், 90 சதவீதம் பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தமிழகம்
முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 34 உதவி பல் டாக்டர் உட்பட, 2,176
உதவி டாக்டர்களை, தற்காலிகமாக நியமிக்க, அரசு முடிவு செய்தது. இதற்கான
போட்டித் தேர்வுக்கு, 6,286 பேர் விண்ணப்பித்தனர். மருத்துவ பணியாளர்
தேர்வு வாரியம், செப்., 28ம் தேதி போட்டித் தேர்வை அறிவித்திருந்தது.
சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்து, செப்., 27ம்
தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.தமிழகத்தில்,
அசாதாரண சூழல் ஏற்பட்டதால், அடுத்த நாள் நடக்க இருந்த போட்டித் தேர்வு,
தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த போட்டித் தேர்வை, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், நேற்று
நடத்தியது. சென்னை, முகப்பேர் வேலம்மாள் பள்ளி, அரும்பாக்கம் அண்ணா ஆதர்ஷ்
கல்லுாரி, பச்சையப்பன் கல்லுாரி என, மூன்று தேர்வு மையங்களில் தேர்வு
நடந்தது. காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை நடந்த தேர்வில், 5,650 பேர்
வரை பங்கேற்றனர்.
விண்ணப்பித்தோரில், 90 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு
முடிவுகள், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என, மருத்துவ பணியாளர் தேர்வு
வாரிய அதிகாரிகள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...