மத்திய அரசு அறிவித்தபடி
7 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும்
தமிழக அரசுக்கு, பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
சென்னை, அக்.8-
தமிழக முதல்-அமைச்சருக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின்
மாநிலத்தலைவர் கு.பால்பாண்டியன் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில்
கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தற்போது 100 சதவீத அகவிலைப்படியை பெற்று
வருகிறார்கள். கடந்த 1-ந் தேதி முதல் 7 சதவீத அகவிலைப்படி உயர்வினை மத்திய
அரசு அறிவித்து, உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை மத்திய அரசு பணியாளர்கள்
பெற்று வருகிறார்கள். ஆனால் மத்திய அரசுக்கு இணையாக, உயர்த்தப்பட்ட 7 சதவீத
அகவிலைப்படியானது வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே
வரவுள்ள தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால செலவுகளை எதிர்கொள்ளும் வகையில்
நிலுவையாக உள்ள 7 சதவீத அகவிலைப்படியை கடந்த 1-ந் தேதி முதல் கணக்கிட்டு
வழங்கிட உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...