நாட்டின் பல்வேறு பகுதிகளில், குழு கணித
ஒலிம்பியாட் நிகழ்ச்சியை, வரும் டிசம்பர் 7ம் தேதி சி.பி.எஸ்.இ.
நடத்தவுள்ளது. தற்போது, 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்கள், இந்த கணிதப் போட்டியில் பங்கேற்க தகுதியுடையவர்கள். ஆனால்,
கேள்வித்தாள் அனைவருக்கும் ஒன்றுதான்.
இப்போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள பள்ளிகள்,
ஸ்கிரீனிங் டெஸ்ட் மேற்கொள்ள, 5 மாணவர்களைத் தேர்வுசெய்ய வேண்டும்.
மாணவர்களின் கணிதத் திறன் மற்றும் கணித அறிவை வளர்க்கும் பொருட்டு
இப்போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டியில் கலந்துகொள்ள, பள்ளிகளின்
சார்பில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், நுழைவுக் கட்டணமாக ரூ.100ஐ, டிடி
வடிவில் செலுத்த வேண்டும். இத்தேர்வில் கலந்துகொள்வதற்கு விண்ணப்பிக்க
வேண்டிய கடைசித்தேதி நவம்பர் 5.
மாணவர்களின் வசதிக்கேற்ப, இப்போட்டி, ஒரு
மாநிலத்தில், ஒன்று அல்லது இரண்டு இடங்களில் நடத்தப்படும். இப்போட்டித்
தேர்வு ஆங்கில மொழியில் மட்டுமே நடைபெறும்.
இத்தேர்வுக்கான நேரம் 3 மணிகள் மற்றும் தேர்வு நடைபெறும் இடங்கள் சர்குலர் மூலம் அறிவிக்கப்படும்.
கணித ஒலிம்பியாட் போட்டியானது, CBSE அமைப்பால்,
பிராந்திய, மாநில மற்றும் சர்வதேச அளவில், கணிதப் பாடத்தில் சிறந்து
விளங்கும் மாணவர்களின் திறன்களை சிறப்பாக்கும் பொருட்டு நடத்தப்படுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் மூலம், பங்கேற்பாளர்களின்
அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, நம்பர் தியரி, காம்பினேட்டரிஸ் ஆகியவை தொடர்பான
அறிவும், திறனும் சோதித்தறியப்படும். இப்போட்டியின் முடிவில், 30
மாணவர்கள், இந்திய அளவில், பிராந்திய வாரியாக தேர்வு செய்யப்பட்டு, NBHM
நடத்தும் இந்திய தேசிய கணித ஒலிம்பியாட் போட்டிக்கு அனுப்பப்படுவார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...