தமிழகத்தில், 5,770 அரசு பள்ளிகளுக்கு ஆர்.எம். எஸ்.ஏ.,திட்டத்தில் ரூ.3.கோடிக்கான மானிய நிதியை முன்கூட்டியே வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆர். எம்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் ஆய்வக கருவிகள், புத்தகங்கள், மின்சார கட்டணம் என, பல்வேறு தேவைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதி, ஆண்டின் இறுதியில் கிடைப்பதால், தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருந்தது. இவ்வாண்டு முன்கூட்டியே நிதியை வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. இதன்படி, தமிழகம் முழுவதும் 5, 770 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம், ரூ.2 கோடியே 88 லட்சத்து 500 க்கான நிதியை ஒதுக்கி, இதற்கான உத்தரவை அனைத்து மாவட்ட கல்வித் துறை அலுவலகத்திற்கும் அரசு அனுப்பியுள்ளது. இவ்வாண்டு முன் கூட்டியே நிதி கிடைப்பது பயனுள்ளதாக இருக்கும் என, ஆர்.எம். எஸ்.ஏ., திட்ட அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...