குரூப்-4 தேர்வில் வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த 14-ஆம் தேதி அறிவித்தது. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 4,963. இதற்கான விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி நவம்பர்-12. தேர்வுகள் வரும் டிசம்பர்-21ம் தேதி நடைபெறும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு.
10ம் வகுப்பு முடித்த பி.சி., எம்.பி.சி., பி.சி(எம்)., டி.டபுள்யூ ஆகிய
பிரிவினருக்கு வயது வரம்பு 32 என்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 35
என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு
மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை என்று தேர்வாணையம்
நிர்ணயித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டால் 10ம் வகுப்பு மட்டுமே முடித்த
பலரும் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, அவர்கள் நலன்கருதி 10-ஆம் வகுப்பு மட்டுமே முடித்தவர்களுக்கு வயது வரம்பை 40ஆக உயர்த்த ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...