ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 யூனியன், ஒரு நகர்புறத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் 234 அங்கன்வாடி பணியாளர்கள், ஐந்து குறு அங்கன்வாடி பணியாளர்கள், 259 அங்கன்வாடி உதவியாளர்கள் என, 498 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதன்படி, யூனியன் வாரியாக அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் சேர்த்து, அம்மாபேட்டையில் 26, அந்தியூரில் 66, பவானி 45, பவானிசாகர் 14, சென்னிமலையில் 19, ஈரோடு 57, கோபியில் 62, கொடுமுடியில் 28, மொடக்குறிச்சியில் 31, நம்பியூரில் 27, பெருந்துறையில் 25, சத்தியமங்கலத்தில் 34, டி.என்.பாளையத்தில் 15, தாளவாடியில் 14, ஈரோடு நகர்புறத்தில் 35, பணியிடங்கள் காலியாக உள்ளன.
அங்கன்வாடி பணியாளர் பணிக்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றவர்கள் 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விதவை, கணவரால் கைவிடப்பட்டவர் 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். மலைப்பகுதியில் இருந்து விண்ணப்பம் செய்வோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 20முதல் 40 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ளவர்கள், அப்பகுதியில் உள்ள பணியிடத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அங்கன்வாடி பணியாளருக்கு ஊதியம் 2,500-5,000 மற்றும் தர ஊதியம் 500 ரூபாயாகும். குறு அங்கன்வாடி பணியாளருக்கு 1,800-3,300, தர ஊதியம் 400 ரூபாய் வழங்கப்படும். அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு 1,300-3,000 மற்றும் தர ஊதியம், 300 ரூபாய் வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பம், சம்மந்தப்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பெற்று, வரும் 25ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் பிரபாகரன் கேட்டுக்கொண்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...