குரூப்-4 தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி நேற்று தொடங்கியது.தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 பதவியில் அடங்கிய
இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39), இளநிலை உதவியாளர்
(பிணையமற்றது)- 2133, தட்டச்சர்&1683, சுருக்கெழுத்து
தட்டச்சர்&331, வரித் தண்டலர் &22, வரைவாளர்&53, நில
அளவர்&702 ஆகிய மொத்தம் 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
இதற்கான எழுத்து தேர்வு, டிசம்பர் 21ம் தேதி நடக்கிறது. அறிவிப்பு வெளியான
மறு நிமிடமே ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தான் கல்வி தகுதியாக
அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏராளமான பட்டதாரிகளும் போட்டி போட்டு
விண்ணப்பித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரக்கணக்கானோர்
விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 12ம் தேதி
இறுதி நாள். தேர்வு கட்டணங்களை செலுத்த நவம்பர் 14ம் தேதி கடைசி நாள்
என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...