தகவல் அறியும் உரிமை சட்டத்தின்
மூலம் பெறப்பட்ட தகவல்களில், இந்திய பிரதமர் அலுவலக
இண்டர்நெட் இணைப்பின் வேகம் 34 எம்பிபிஎஸ் (Mbps) எனத் தெரியவந்துள்ளது.
ஆன்லைன்ஆர்டிஐ.காம் (onlinerti.com) என்ற இணையதளத்தின் துணை
நிறுவனரான வினோத் ரங்கநாதன் தகவல்
அறியும் உரிமைசட்டத்தின் மூலம்
இந்த தகவலைப் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக விண்ணப்பித்திருந்த வினோத்திற்கு பிரதமர் அலுவலகம் அளித்த
பதிலில், 'தேசிய தகவலியல் மையம்
பிரதமர் அலுவலகத்திற்கு சராசரியாக 34 எம்பிபிஎஸ் இணைய வேகத்தை அளிக்கிறது.
கிளையன்ட் கம்ப்யூட்டர் வின்டோஸ் 7/வின்டோஸ் 8 ஆகியவற்றிலும், சர்வர் வின்டோஸ் மற்றும்
லினெக்ஸ் ஆகியவற்றிலும் இயங்குகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக வினோத் ரங்கநாதன் கூறுகையில், 'பிரதமருக்கு 34 எம்பிபிஎஸ் திறன்கொண்ட அதிவேக இன்டர்நெட் இணைப்பு அளிக்கப்பட்டிருப்பது தவறல்ல. நாட்டின் பிரதமருக்கு இத்தகைய அதிவேக இன்டர்நெட் இணைப்பு தேவை. அமெரிக்க மக்களுக்கு கூகுள் ஃபைபர் 1 ஜிபிஎஸ் வேக இன்டர்நெட் இணைப்பை அளிக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...