பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2014-2015 கல்வி ஆண்டில் 100 அரசு மேல்நிலைப்பள்ளிகள் தரம்
உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் சில அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் காலியாகக்கிடக்கின்றன. தரம் உயர்த்தப்பட்ட
மேல்நிலைப்பள்ளிகளுக்கும், தலைமை ஆசிரியர் காலியாக இருக்கும்
மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு
31-ந்தேதி நடக்கிறது.
இதைத்தொடர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முது நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
தரம் உயர்த்தப்படும் 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை
ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது. இந்த கலந்தாய்வுகள்
அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இணையதளம் மூலம்
நடத்தப்படுகிறது.
இந்த தகவலை வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...