தமிழக அரசில் 4963 பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இளநிலை உதவியாளர் பணியிடங்கள் (2173), பில்கலெக்டர்(22), டைப்பிஸ்ட் (1683), ஸ்டெனோ டைப்பிஸ்ட் (331) களஆய்வாளர்(702), வரைவாளர் (53)
பணிகளுக்கு இத்தேர்வு வரும் டிச., 21ல் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடக்கும். இதில் பங்கேற்க நவ.,12 வரை விண்ணப்பிக்கலாம். 'ஆன்லைன்' மூலம் (www.tnpsc.gov.inமற்றும் www.tnpsc exams.net) மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு அடிப்படை சம்பளம் 5200 ரூபாய் வழங்கப்படும். தரச்சம்பளமாக ஸ்டெனோ டைப்பிஸ்டுகளுக்க ரூ.2800ம், மற்றவர்களுக்கு ரூ.2400ம் வழங்கப்படும். கல்வித் தகுதி 10ம் வகுப்பு. எஸ்.சி., எஸ்.டி., தரப்பினர் 35 வயது வரையும், பி.சி., மற்றும் எம்.பி.சி., பிரிவினர் 32 வயது வரையும், மற்றவர்கள் 30 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ.,க்களில் சர்வேயர் மற்றும் வரைவாளர் பயிற்சி பெற்றவர்கள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...