காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 209 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை
நிரப்புவதற்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது.
4,393 பணியிடங்கள்: தமிழகம் முழுவதும்
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர்
பணியிடங்களை நிரப்ப, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில்
தேர்வுக்குழு அமைக்கப்படும் என, மாநில கல்வித் துறை அறிவித்து இருந்தது.
காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் 79 இடங்களும்,
செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் 130 பணி இடங்களும் காலியாக உள்ளன. இந்த
பணியிடங்களை நிரப்ப, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திடம் இருந்து, மாவட்ட
அளவிலான பதிவு மூப்பு பட்டியலை, கல்வி மாவட்ட அலுவலகங்கள் கேட்டுள்ளன.
அதன்படி, இனம், வயது வரம்பு உள்ளிட்டவற்றின்
அடிப்படையில், பதிவுதாரரின் பட்டியல், சம்பந்தப்பட்ட கல்வி மாவட்டத்திற்கு,
வேலைவாய்ப்பு அலுவலகம் அளித்துள்ளது. அதோடு, பதிவு மூப்பு பட்டியல்,
வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. பதிவுதாரர்கள் தங்கள்
பதிவை, இன்று முதல் சரிபார்த்துக் கொள்ளலாம்.
அதன்படி, 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள்,
எஸ்.சி., - எஸ்.டி., எஸ்.சி.ஏ., ஆகிய வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கு 35
வயதும், பி.சி., மற்றும் எம்.பி.சி., வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 32 வயதும்,
ஓ.சி., பிரிவினருக்கு 30 வயதும் என, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரம்பு இல்லை: மேலும், எஸ்.சி., - எஸ்.டி., -
எஸ்.சி.ஏ., - எம்.பி.சி., - பி.சி., - பி.சி.எம்., ஆகிய பிரிவைச் சேர்ந்த
பதிவுதாரர்கள் மேல்நிலைக் கல்வி, பட்டயம் அல்லது பட்டபடிப்பு தேர்ச்சி
பெற்றிருப்பின், அவர்களுக்கு வயது வரம்பு இல்லை எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...