இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்.) முதல்நிலைத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை
வெளியிடப்பட்டன. இதில் 16,933 பேர் தேர்ச்சி பெற்றனர்.இந்தியக் குடிமைப்
பணிகளுக்கான தேர்வு கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில்
4.52லட்சம் பேர் பங்கேற்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட
தேர்வு முடிவில் 16,933 பேர் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) செயலர் ஆஷிம் குர்ஹானா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆனால், இந்த ஆண்டில் தேர்வு முடிவடைந்து 50 நாள்களிலேயே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பிரதானத் தேர்வானது, வரும் டிசம்பர் 14 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சர்ச்சையுடன் தொடக்கம்: இந்த ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணிகளுக்கான
முதல்நிலைத் தேர்வானது, முன்னெப்போதுமில்லாத வகையில் சர்ச்சையுடன்
தொடங்கியது. தேர்வில் ஆங்கில மொழி அறிவு பகுதிக்கு எதிர்ப்பு தெரிவித்து
ஏராளமான மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக, இந்தப்
பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்கு பதிலளிக்கத் தேவையில்லை என
யு.பி.எஸ்.சி. அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...