வரும், 15ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதால், அன்று
முதல், அடுத்த மாதம், 10ம் தேதி வரை புதிய வாக்காளர்கள், பட்டியலில் சேர
விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேர்தல்
கமிஷன் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான
வாக்காளர் பட்டியல்கள், 01.01.2015ம் தேதியை மைய நாளாக கொண்டு, சிறப்பு
சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.இந்த சுருக்க முறை திருத்தம்
தொடர்பாக, வரைவு வாக்காளர் பட்டியல்கள், சென்னை மாநகராட்சி மண்டல
அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட
ஓட்டுச்சாவடி மையங்களில் வரும், 15ம் தேதி வெளியிடப்படும்.பொது மக்கள்,
இந்த பட்டியலில் தங்கள் பெயர்கள் உள்ளதா என்று சரிபார்த்து கொள்ள
வேண்டும்.பட்டியலில் பெயர் விடுபட்டோர், 01.01. 2015 அன்று 18 வயது
பூர்த்தி அடைந்தோர், படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்கலாம்.
பெயர் நீக்கம், திருத்தம், தொகுதி மாறியோர், புதிய இடத்தில் வாக்காளர்
பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்வதற்கும் உரிய படிவங்களை பூர்த்தி செய்து,
ஆவணங்களுடன் ஓட்டுச்சாவடி பதிவு அலுவலர் அலுவலகத்திலோ, ஓட்டுச்சாவடி
மையங்களிலோ வரும், 15ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம். மேலும், வரும், 19ம் தேதி, அடுத்த மாதம் 2ம் தேதி
ஞாயிற்றுக்கிழமைகளில், ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள்
நடத்தப்பட உள்ளன. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
www.elections.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாகவும் பெயர் சேர்த்தல்,
நீக்கல், திருத்தங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...