Home »
» இந்தியா முழுவதும் நவம்பர் 12–ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.?
ஊதிய மறுஆய்வு கோரி இந்தியா முழுவதும் வருகிற நவம்பர் மாதம் 12–ந்தேதி
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் 8
லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள்.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க (ஏ.ஐ.பி.இ.ஏ.)
பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:–
ஊதிய மறுஆய்வை வலியுறுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 12–ந்தேதி நாடு
முழுவதும் உள்ள நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும்
வெளிநாட்டு வங்கிகளில் பணிபுரியும் 8 லட்சம் ஊழியர்களும் ஒரு நாள் வேலை
நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த போராட்டத்தில் கிராம வங்கி
ஊழியர்களும் பங்கேற்பார்களா? என்பது குறித்து இன்னும் முடிவு
செய்யப்படவில்லை.
பெங்களூரில் கடந்த 13–ந்தேதி வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை
கூட்டம் நடைபெற்றது. இதில் வருகிற 30–ந்தேதி மாநில தலைநகரங்கள் மற்றும்
முக்கிய இடங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு
உள்ளது. இதேபோல், நவம்பர் 11–ந்தேதி அனைத்து வங்கிகள் முன்பும் போராட்டம்
நடத்தப்படும்.
மேலும், தென்மண்டலத்தில் டிசம்பர் 2–ந்தேதி முதல் தொடர்
வேலைநிறுத்தப்போராட்டம் நடத்தப்படும். வடக்கு மண்டலத்தில் டிசம்பர்
3–ந்தேதியும், கிழக்கு மற்றும் வடகிழக்கு மண்டலத்தில் டிசம்பர்
4–ந்தேதியும் இந்த போராட்டம் தொடங்கும். மேற்கு மண்டலத்தில் 5–ந்தேதி முதல்
வேலைநிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.
எங்களது கோரிக்கைகளை அரசிடம் கடந்த 2 ஆண்டுகளாக தெரிவித்து வருகிறோம். 13
முறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் மத்திய அரசு திருப்திகரமான எந்த
முடிவையும் எடுக்கவில்லை. குறிப்பாக ஊதிய மறுஆய்வை மறுப்பதோடு, தொடர்ந்து
காலம் கடத்தியும் வருகிறார்கள். இருப்பினும் வங்கி ஊழியர்கள் தங்கள் பணியை
சிறப்பாக செய்து வருகிறார்கள். அரசின் திட்டப்பணிகளை வாடிக்கையாளர்களிடம்
சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...