Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET பணி நியமனம் பெறாதவர்கள், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கோர முடியாது.

          ‘ஆசிரியர் தகுதி தேர்வில் (டி..டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான், ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்என, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர். பி.,) வட்டாரம் தெரிவித்தது.


           டி..டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும், மாறி மாறி வருவதால், இந்த விவகாரத்தில், முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை, அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதிய வர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.

              கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 27 ஆயிரம் பேரும், சமீபத்தில், முதல்வர் அறிவித்த, 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக, 47 ஆயிரம் பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆயிரம் இடங்கள் மட் டுமே காலியாக உள்ள நிலையில், 74 ஆயிரம் பேர், தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது, பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது. ஏனெனில், தேர்ச்சி பெற்ற அனைவரும், அரசு வேலை கிடைக்கும் என்ற நம் பிக்கையில் உள்ளனர்.

          தற்போதுள்ள காலி இடங்களுக்கு, தேர்வு பெறுவோர் போக, மீதம் உள்ளவர்களுக்கு, அடுத்த பணி நியமனத்தின் போது, முன்னுரிமை கிடைக்கும் என, தேர்வர்கள், எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால், இதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு, டி.ஆர்.பி., முன்வரவில்லை.

          எனினும், இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: கடந்த, 2013 தேர்வில் தேர்ச்சி பெற்றோர், 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றோர் ஆகிய இரு தரப்பினரின் மதிப்பெண்களையும் மதிப்பீடு செய்து, இட ஒதுக்கீடு வாரியாக, அதிக மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர் மட்டுமே, ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவர். தேர்வு பெறாதவர்கள், அடுத்த காலி பணியிடங்களை நிரப்பும்போது, முன்னுரிமை கோர முடியாது.

           அடுத்து, மீண்டும், டி..டி., தேர்வு நடந்தால், அதில் தேர்ச்சி பெறுபவரின் மதிப்பெண் மற்றும் ஏற்கனேவ, 2013ல் தேர்ச்சி பெற்று, அரசு பணி கிடைக்காமல் காத்திருக்கும் விண்ணப்பதாரருடைய மதிப்பெண் ஆகிய இரண்டையும் கலந்து, அதில், அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரரே, அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவார்.

இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

- தினமலர்.




2 Comments:

  1. WEIGHTAGE முறை ரத்து செய்யப்பட்டால் மட்டுமே பாதிப்பு வராது... இந்த weightage முறை. தொடர்ந்தால் எவ்வளவு தான் TET ல் மதிப்பெண் பெற்றாலும் 2000 க்கு முன்பு படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காது இது தான் உன்மை நிலவரம்... ஒன்று TET மதிப்பெண். அடிப்படையில் மட்டும் பணி வழங்க வேண்டும் அல்லது இப்போது தேர்ச்சி பெற்று பணி கிடைக்காதவர்களுக்கு அட்த்த பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும். இது தான் நீதி ...

    ReplyDelete
  2. இந்த TETல் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமன்த்திற்கு தேர்வு பெறாதவர்கள், அடுத்த காலி பணியிடங்களை நிரப்பும்போது, முன்னுரிமை கோர முடியாது என TRB கூறுகிறது. அப்படியென்றால் உதாரணத்திற்கு ஒருவர் 82 மதிப்பெண் பெற்று 12ல் சுமாரன மதிப்பெண் பெற்றிருந்தால் 7 வருடங்கள் இல்லை 14 வருடங்களானாலும் வீலை பெற முடியாது.அப்படியெனில் தற்போது நடந்து முடிந்த தேர்விற்கு CERTIFICATE எதற்கு?இந்த CERTIFICATE ன் பயன்தான் என்ன. இந்த CERTIFICATE, 7 வருடங்களுக்கு Valid என்ற அறிவிப்பு எதற்கு. காலிப்பணியிடத்திற்கு தக்கவாறு அவ்வப்போது TET நடத்தி “திறமையான?” ஆசிரியர்களை தேர்வு செய்யலாமே. எதற்காக TRB candidates ஐ குழப்புகிறது?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive