ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றும் 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய
கோரி பலர்வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வில்
இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்சலுகை அளித்து தமிழக
அரசுபிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த
வழக்குகளை நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ்
ஆகியோர் விசாரித்தனர்
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலையில் பிறப்பித்தார்கள். அதில் நீதிபதிகள்,இந்த வெயிட்டேஜ் முறையில் அரசின் கொள்கை முடிவு விதி மீறல் இல்லை என்றுநிரூபிக்கப்படவில்லை. எனவே, அரசின் இந்த கொள்கை முடிவில் இந்த கோர்ட்டு தலையிடமுடியாது. வெளியிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்.

ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்க அரசுக்கு
அதிகாரம்உள்ளதால், இதுதொடர்பாக தாக்கல்செய்துள்ள மனுக்களையும் தள்ளுபடி
செய்கிறோம்.இவ்வாறு கூறியுள்ளனர்.
இத் தீர்ப்புக்குறித்து வழக்கு தொடுத்த பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடிவெடுத்துள்ளதாக த்கவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...