Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET மதிப்பெண் சலுகை ரத்து: அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்

         ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள
மதிப்பெண் சலுகை செல்லாது என உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. இந்தத் தீர்ப்பு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைப்பதால் கல்வியின் தரம் குறைந்துவிடும் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வை அறிமுகம் செய்வதற்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்கியுள்ளனர்.
தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய மாநில அரசுகளுக்குத் தேசிய ஆசிரியர் கல்விக் குழு அதிகாரம் வழங்கியிருக்கிறது.
எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் செல்லாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மேலும் தேவையற்ற குழப்பங்களையும், முறைகேடுகளையும் தவிர்க்க தகுதிகாண் மதிப்பெண் முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.




6 Comments:

  1. தகுதித்தேர்வு அறிவித்தபோதே ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டிருந்தால் இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டிறிக்காது.மாறாக தேர்வுஎழுதியபிறகு கால்ம் கடந்து வ்ழ்ங்கப்பட்டது.மேலும்,ஒரு g.o இரத்து செய்யப்படும்பொழுது அந்த தேதி முதலே அமலுக்கு வரும்.ஆனால் கல்வித்துறை இதையெல்லாம் அறிந்தும் அவசர்மாகப் பணிநியமணம் செய்துள்ளது .வியப்பைத்தருவதாக உள்ளது.உச்சநீதிமன்றம்பல வழக்குகளில் தீர்ப்பு வழங்க்கியுள்ளது.மேல் முறையீடு செய்யும்பொழுது ஆசிரியர்கள் பாதிப்படையவாய்ப்புகள் உள்ளதை கல்வித்துறை கவனத்தில் எடுத்ததாகத்தெரியவில்லை.அவசரமுடிவு ,பணிநியமனம் பெற்றவர்களின் எதிகால்ம் என்ன?

    ReplyDelete
    Replies
    1. sir vannakam, ennaku oru doupt pls , athavathu TET enpathu thaguthi exam mattum thaan, but ethu potti theruo ellai, ethai vaithu epdi posting poda mudium, TET pass pannuna anaivarukum avanga subjectla potti theru vaika vendum enru courtl case file pannalama sir pls reply or pls sent mobil num

      Delete
  2. Posting after data than g.o cancel

    ReplyDelete
  3. ARASAN ANDRU KONDRAN( TET VALAKKIL). DEIVAM NINRU KONDRATHU (SOTHU KUVIPPU VALAKKIL).

    ReplyDelete
    Replies
    1. sir vannakam, ennaku oru doupt pls , athavathu TET enpathu thaguthi exam mattum thaan, but ethu potti theruo ellai, ethai vaithu epdi posting poda mudium, TET pass pannuna anaivarukum avanga subjectla potti theru vaika vendum enru courtl case file pannalama sir pls reply or pls sent mobil num

      Delete
  4. எப்படியோ பாஸ் பன்னாதவங்களுக்கு வேலை கொடுத்துட்டீங்க.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive