Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET: மதுரை நீதிமன்றதில் தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல் - தினமலர்

        வெயிட்டேஜ்' பிரச்னைக்கு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு & மதுரை நீதிமன்றதில் தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல் - தினமலர்


         "தடை விலக்கிக்கொள்ளப்பட்டதும், அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரியர் நியமனம் செய்யும் பணி நடக்கும் எனவும், கல்வித் துறை தெரிவித்தது"
      'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், இன்று மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய, போராட்ட குழுவினர் முடிவு செய்து உள்ளனர். 
ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதற்காக, தமிழக அரசு கொண்டு வந்த புதிய முறையை எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

               இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, தகுதி தேர்வை (டி.இ.டி.,), ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்துகிறது. தகுதி தேர்வில், 60 சதவீத மதிப்பெண், கல்வி தகுதியில், 40 சதவீத மதிப்பெண் என, 100 மதிப்பெண்ணுக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
       'கிரேடிங்' முறைபட்டதாரி ஆசிரியர் பணிக்கு, தகுதி தேர்வில், 60 சதவீதம், கல்வி தகுதியாக, பிளஸ் 2வுக்கு, 10; பட்டப் படிப்புக்கு, 15; பி.எட்., படிப்புக்கு, 15 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது.
   
        இடைநிலை ஆசிரியர் பணிக்கு, தகுதி தேர்வில், 60 சதவீதம், கல்வி தகுதியாக, பிளஸ் 2வுக்கு, 15; ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு, 25 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது.
        இந்த, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயத்தில், 'கிரேடிங்' முறை பின்பற்றப்பட்டது. அதாவது, பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதத்துக்கும் மேல் பெற்றிருந்தால், 10 மதிப்பெண்; 80 - 90 சதவீதம் பெற்றிருந்தால், 8; 70 - 80 சதவீதம் பெற்றிருந்தால், 6 என, கிரேடு முறை பின்பற்றப்பட்டது.
         இதே போல், பட்டப் படிப்பில், பி.எட்., படிப்பில், 70 சதவீதம் மேல் பெற்றிருந்தால், 15 மதிப்பெண்; 50 - 70 சதவீதம் வரை பெற்றிருந்தால், 12 மதிப்பெண் என, பின்பற்றப்பட்டது.

           தமிழக அரசு கையாண்ட, 'கிரேடிங்' முறையை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து, ரத்து செய்தார். மதிப்பெண் கணக்கிடுவதற்கான புதிய முறையை கொண்டு வரும்படி, அரசுக்கு பரிந்துரை செய்தார். கடந்த, ஏப்ரலில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
         மே மாதம் முதல் அமல்இதையடுத்து, நீதிபதியின் பரிந்துரைப்படி, புதிய, 'வெயிட்டேஜ்' கணக்கிடும் முறையை, கடந்த மே மாதம், அரசு கொண்டு வந்தது. அதன்படி, தகுதி தேர்விலும், கல்வி தகுதி தேர்விலும், எவ்வளவு மதிப்பெண் பெறப்பட்டதோ, அதன் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது.
   
         கடந்த, ஏப்ரலில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, அதைத் தொடர்ந்து, மே மாதம், பள்ளி கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
        மனுக்களில், 'சரிவர பரிசீலிக்காமல், தனி நீதிபதி தெரிவித்த பரிந்துரையை, அரசு ஏற்றுக் கொண்டு, அரசாணை பிறப்பித்துள்ளது. தகுதி தேர்வில், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, 60ல் இருந்து, 55 சதவீதம் என, தகுதி மதிப்பெண் அளவை குறைத்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட, தகுதி தேர்வு மதிப்பெண்ணை, குறைக்கும் அதிகாரம், அரசுக்கு இல்லை' என, கூறப்பட்டுள்ளது.
'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவு

          மனுக்களை, நீதிபதிகள் அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, சிறப்பு அரசு பிளீடர், டி.கிருஷ்ணகுமார், ஆஜராகினர். 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
        ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வகுத்துள்ள வழிமுறைகளின்படி, தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவதற்கு, தமிழக அரசு, தன் அதிகாரத்தை செயல்படுத்தி உள்ளது. தகுதி மதிப்பெண் தளர்த்தப்பட்டதன் மூலம், தகுதி அடிப்படையில் மனுதாரர்களை பரிசீலிப்பதற்கான உரிமை பறிபோய் விடவில்லை.
                  கடந்த, 2013, ஆகஸ்டில், தகுதி தேர்வு நடத்தப்பட்டது. 2012, அக்டோபரில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தேர்வு எழுதிய பின், அரசு பின்பற்றிய நடைமுறையை, மனுதாரர்கள் எதிர்க்க முடியாது.
        மனுதாரர்கள், 'வெயிட்டேஜ்' முறையையும், தகுதி தேர்வில் மதிப்பெண் கணக்கிடும் முறையை கையாள்வதையும் எதிர்த்துள்ளனர். கல்வி தகுதிக்கு என, 40 சதவீத மதிப்பெண் நிர்ணயித்தது தொடர்பாக, இந்தப் பிரச்னையை முன்பு யாரும் எழுப்பவில்லை.
         மூன்று விதமான தேர்வுகளை (பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட்., படிப்பு) அரசு பரிசீலனைக்கு எடுத்துள்ளது. இந்த அளவுகோல், நியாயமானது. படிப்பில் எடுத்த மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, ஆசிரியர் தேர்வு நடக்கவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 60 சதவீத மதிப்பெண் அளிக்கப்படுகிறது. மீதி, 40 சதவீதம் தான், அடிப்படை கல்வி தகுதிக்கு வழங்கப்படுகிறது.
          எனவே, தகுதி தேர்வுக்கு, அரசு பின்பற்றியுள்ள மதிப்பெண் நடைமுறையை, தன்னிச்சையானது எனக் கூற முடியாது. அரசு பின்பற்றும் நடைமுறை சரியல்ல என, மனுதாரர்கள் தான் விளக்க வேண்டும்.முன்பு பின்பற்றிய நடைமுறை (கிரேடிங்) சரியில்லை எனக் கூறி, அதை, தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். அதனால், முரண்பாடுகளை, அரசு சரியாகவே நீக்கி உள்ளது.
       மற்ற மாநிலங்களான, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகியவற்றில் பின்பற்றப்படும் நடைமுறையை ஒப்பிடும் போது, தமிழகத்தில் பின்பற்றப்படும் நடைமுறை சரியானது தான். அரசு பின்பற்றும் முறையில் நியாயமில்லை என, மனுதாரர்களால் விளக்க முடியவில்லை.
தனி நீதிபதியின் பரிந்துரையில், எந்த தவறும் இல்லை. அதைத் தொடர்ந்து, அரசு பிறப்பித்த உத்தரவிலும், எந்த சட்ட விரோதமும் இல்லை. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகின்றன.

        இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து, போராட்டக் குழுவினர், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
       தீர்ப்பு, எங்களுக்கு, அதிர்ச்சியை அளித்துள்ளது. இது, எங்கள் வாழ்க்கை பிரச்னை. எனவே, உச்ச நீதிமன்றத்திடம் முறையிட, முடிவு செய்துள்ளோம்.நாளை (இன்று), மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல்
       புதிய ஆசிரியர் நியமனத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு, இன்று மனு தாக்கல் செய்கிறது.
     'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்தது. இதன் அடிப்படையில், ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கியுள்ள தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு, இன்று மனு தாக்கல் செய்ய இருப்பதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

        தடை விலக்கிக்கொள்ளப்பட்டதும், அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரியர் நியமனம் செய்யும் பணி நடக்கும் எனவும், கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




13 Comments:

  1. தேர்வானவர்கள் அனைவருக்கும் இன்று மதியத்திற்குள் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வழங்கவது தொடர்பாக தகவல் வரும்
    என எதிர்பார்க்கப்படுகிறது

    ReplyDelete
  2. Have a Good day today !!

    ReplyDelete
  3. போராட்ட குழுவினரின் கோரிக்கைகள் நியாயமானது .ஆனால் இவர்கள் போராட்டநேரம் உகந்தது அல்ல. வெயிட்டேஜ் தொடர்பான அரசாணை வெளிடப்பட்ட நேரத்திலேயே இதற்கான போராட்டத்தினை நடத்தி இருக்க வேண்டும்.நீதி மன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து இந்த முறை மட்டும் போராட்டத்தினை கைவிட்டு விட்டு,இனி வருங்காலங்களில் புதிய நடைமுறை ஒன்றினை உருவாக்க கோரிக்கை சமர்ப்பித்து நியாயம் கேட்டு வெற்றி பெறலாம்.போராட்டத்தினால் புதிய ஆசிரியர் நியமனம் மிக மிக காலதாமதம் ஆவது மாணவர்கள் பெரிதும் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.ஒரு வேளை உச்ச நீதி மன்றம் வெயிட்டேஜ் முறையினை உறுதி செய்து விட்டால் இதுவே நிரந்தரமாகி பெறும் பாதிப்பு உண்டாகிவிடும் என்பதால் அரசிடம் நீதி மன்ற மோதல் போக்கினை கைவிடுவது நலன் பயக்கும். அரசும் போராட்டத்தில் உள்ள நியாயங்களை கண்டிப்பாக ஆய்வு செய்யும் என்ற நம்பிக்கை யில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
    இது என் தனிபட்ட கருத்து இதில் எந்த விதமான விருப்பு வெறுப்பு இல்லை என பதிவு செய்கின்றேன்

    ReplyDelete
  4. Oru varushama kaathirundha engalukku, kallarai kattivittu, oru Mani nerathil niyamanam endru koorum kalvi thuraiyae! Ungal idhayam enna kallaal aanaadha! Kallil kooda eeram irukkum aanaal fungal manathil eerame illaiya?

    ReplyDelete
  5. பாவம் ஆசிரியர்கள் மேல்முறையீட்டிலாவது நல்லது நடக்கட்டும்.

    சென்னை உயர்நீதிமன்றம் எப்போதுமே அரசுக்கு சாதகமாகதான் தீர்ப்பினை வழங்கும். இது தெரிந்ததுதானே.

    ReplyDelete
  6. This type of appointment is most contradict always. Why do the government follow the below method??????????

    90 and above in TET - NO WEIGHTAGE
    82-89 in TET- WEIGHTAGE MUST

    ReplyDelete
    Replies
    1. That is sefish decision brother . Than pizhikka matraverkalai matti veduvadhu sariillai. Be as common like our govt.

      Delete
  7. This type of appointment is most contradict always. Why do the government follow the below method??????????

    90 and above in TET - NO WEIGHTAGE
    82-89 in TET- WEIGHTAGE MUST

    ReplyDelete
  8. சார் தடையை பற்றி மதுரை கோர்ட் நிலவரம் குறித்த தற்போதைய நிலை குறித்து தெரிவிக்குமாறு
    பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் அரசின் நடவடிக்கை குறித்தும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  9. "After the exam result, can not change the GO. What ever it may be create GO before the Exam" - This is Supreme court Judgement. but Govt. changed lot of time. but high court allowed the changes. Which judgement is correct. Tell me Honorable Democratic India.

    ReplyDelete
  10. Weightage mark to be coincided for experience and employment seniority also by ARGTA brte association m.o madurai b.o villupuram (all brutes in tamilnadu pls join with us (genuine) Sangam

    ReplyDelete
  11. அரசு தான் எடுத்த முடிவில் மட்டுமே பிடிவாதமாக உள்ளது. பட்டதாரிகளின் வாழ்க்கையைப் பற்றியோ, அவர்களின உள்ளுணர்வின் வெளிப்பாடுகளைப் பற்றியோ அல்லது அவர்களின் நியாயமான கோரிக்கையைப் பற்றியோ சிறிதும் ககலைப்படவில்லை. ஒவ்வொரு தேர்வின் போதும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள புதிய புதிய தீர்வினை முடிவாக பயன்படுத்தி நியமனம் செய்துவிடுகிறது. இதனால் பல திறமையான ஆசிரியர்களின் பெயர் பட்டியலில் விடுபட வாய்ப்புகள் அதிகம் என்பதை யோசிக்காமல் செய்கிறது.இல்லை யோசித்தும் நம் வேலை முடிந்தால் போதும் என்ற எண்ணத்தில் கம்டுகொள்ளாமல் இருக்கினறதா என புரியவில்லை.. இவர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்ணிற்கு பி.எட் மற்றும் டெட் மதிப்பெண்களை மட்டும் மதிப்பிடலாமே. இடைநிலை ஆசிரியர்களுக்கு டி.டி.எட் மற்றும் டெட் மதிப்பெண்களை மட்டும் எடுத்துக்கொள்ளலாமே. பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் தான் என்ன? 2012 ஆண்டு டெட் தேர்வில் 82 முதல் 89 மதிப்பெண்கள் எடுத்தவர்களை ஏன் தகுதி சான்றிதழ் வழங்காமலும், அவர்களை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்காமலும் விட்டுவிட்டனர். அவர்கள் என்ன பாவம் செய்தனர். ஏன் அவர்கள் தகுதி உடையவர்களாக இருக்க வாய்ப்பில்லையா.? இது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இப்பொழுது இவர்கள் மதிப்பீட்டின்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் போக மற்ற தகுதி பெற்றவர்களை முதலில் நியமனம் செய்துவிட்டு அதற்கு பிறகு புதியதாக தேர்ச்சி பெறுபவர்களை நியமனம் செய்வோம் என்ற அறிக்கையை கூட விட யோசிக்கின்றனர்.. ஏனோ இந்த மனிதாபிமானமற்ற போக்கு.?

    ReplyDelete
  12. sir vannakam, ennaku oru doupt pls , athavathu TET enpathu thaguthi exam mattum thaan, but ethu potti theruo ellai, ethai vaithu epdi posting poda mudium, TET pass pannuna anaivarukum avanga subjectla potti theru vaika vendum enru courtl case file pannalama sir pls reply or pls sent mobil num

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive