பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5
சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது
என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளை தீர்ப்பளித்திருக்கிறது.
ஐகோர்ட்டின் தீர்ப்பு அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் மதிப்பெண்
பெற வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான
தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக தமிழக அரசு
குறைத்தது.
தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்பட்டதை அடுத்து வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற
புதிய முறையை தமிழக அரசு அறிமுகம் செய்ததால் ஆசிரியர் தேர்வில் பெரும்
குழப்பம் நிலவி வரும் சூழலில் இந்த தீர்ப்பை மதுரை ஐகோர்ட்டு
அளித்திருக்கிறது. இந்த தீர்ப்பு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
என்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் செல்லாது என்ற
ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யவேண்டும்; அத்துடன்
தேவையற்ற குழப்பங்களையும், முறைகேடுகளையும் தவிர்க்க வெயிட்டேஜ் மதிப்பெண்
முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தகுதித்தேர்வு அறிவித்தபோதே ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டிருந்தால் இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டிறிக்காது.மாறாக தேர்வுஎழுதியபிறகு கால்ம் கடந்து வ்ழ்ங்கப்பட்டது.மேலும்,ஒரு g.o இரத்து செய்யப்படும்பொழுது அந்த தேதி முதலே அமலுக்கு வரும்.ஆனால் கல்வித்துறை இதையெல்லாம் அறிந்தும் அவசர்மாகப் பணிநியமணம் செய்துள்ளது .வியப்பைத்தருவதாக உள்ளது.உச்சநீதிமன்றம்பல வழக்குகளில் தீர்ப்பு வழங்க்கியுள்ளது.மேல் முறையீடு செய்யும்பொழுது ஆசிரியர்கள் பாதிப்படையவாய்ப்புகள் உள்ளதை கல்வித்துறை கவனத்தில் எடுத்ததாகத்தெரியவில்லை.அவசரமுடிவு ,பணிநியமனம் பெற்றவர்களின் எதிகால்ம் என்ன?
ReplyDeleteARASAN ANDRU KONDRAN( TET VALAKKIL). DEIVAM NINRU KONDRATHU (SOTHU KUVIPPU VALAKKIL).
ReplyDelete