வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில்தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு வாரியம் ‘வெயிட்டேஜ்’ முறையை பின்பற்றுகிறது.
இந்த வெயிட்டேஜ் முறையின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி ஆசிரியர் பணிக்கு கல்வி, திறமை மற்றும் அறிவியல் ரீதியான தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த முறையை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இந்த முறையை பின்பற்றுவதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை’ என்று வாதாடினார்.மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சங்கரன், ஆனந்தி உள்பட பலர் ஆஜராகி, கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்புள்ள தேர்வு முறைக்கும், அதன்பின்புள்ள தேர்வு முறைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் மதிப்பெண் வழங்குவதில் பெரும் வித்தியாசம் உள்ளது. பழைய முறையில் மனுதாரர்கள் படித்தனர். குறைவான மார்க் பிளஸ் 2 தேர்வில் கிடைத்தது. தற்போது முறையில் படிப்பவர்கள் அதிகமான மார்க் பெற்று விடுகிறார்கள். எனவே அவர்கள் அதிகமான வெயிடேஜ் மார்க் பெற்றுவிடுகிறார்கள். எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்று வாதாடினார்கள்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
Source:
2013 தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.
ReplyDeleteஅழைப்பேசி : 7598000141
GO. 71. ஒழிக
Deleteஅமைதியும் , தூக்கமும் உங்களுக்கு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் .....
Delete2012 தகுதி தேர்வில்82-89 மதிப்பெண் பெற்ற ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.
ReplyDeleteஅழைப்பேசி :9629424050 ravi thamoas , 9944246797 sivaganam
2012. எல. கேளுங்கப்பா ,அழுதபுள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் கேளுங்கப்பா கேளுங்க
ReplyDelete