Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET இந்த வார இறுதிக்குள் தீர்ப்பு வருமா?

          சென்னை அமர்வு நீதிமன்றத்தில் TET குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் 5% தளர்விற்கு எதிரான வழக்கின் வாதங்கள் மட்டுமே நடைபெற்றது. இந்த வாதங்களே கிட்டதட்ட 3 மணிநேரம் நடைபெற்றது.
         வாதிகளின் தரப்பில் அனுபவம் வாய்ந்த 4 வழக்குரைஞர்கள் வாதாடினார்கள். அவர்களில் திருமதி.நளினி சிதம்பரம், திரு.சங்கரன். போன்றோர் குறிப்பிடதக்கவர்கள்.

              வாதிகளின் வழக்குரைஞர்களாகிய இவர்கள் 5% தளர்வு வழங்கியது தவறில்லை, ஆனால் முன் தேதியிட்டு வழங்கியது தவறென்றும், அரசியல் காரணங்களுக்காக 5% தளர்வு வழங்கப்பட்டதென்றும், SC&ST பிரிவினருக்கு 5% தளர்வு வழங்கியது தவறில்லை ஆனால் BC&MBC பிரிவினருக்கும் சேர்த்து 5% தளர்வு வழங்கியது தவறு. BC&MBC பிரிவினருக்கு 3% மட்டுமே தளர்வு வழங்கியிருக்க வேண்டும் என்றும் இது போன்ற மேலும் சில வாதங்களையும் முன்வைத்தனர்..

           அரசு தரப்பில் வாதாடிய AG திரு.சோமையாஜி மற்றும் பள்ளிக்கல்வித்துறை சிறப்பு வழக்குரைஞர் திரு.கிரிஷ்ணமூர்தி அவர்களும் தற்போது பின்பற்றப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளும் நீதிமன்றம் பரிந்துரைத்ததன் பேரிலும், நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும்தான் பின்பற்றப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்கள்..

                         இன்று (16.09.2014) - 5% தளர்வு குறித்த விவாதமும்,G.O 71 குறித்த முழு விவாதமும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இந்த வழக்குகளுக்கான தீர்ப்பும் இந்த வார இறுதிக்குள் வரும் என்றும் நம்பப்படுகிறது.

Thanks to Mr. Balamuthu.




Related Posts:

78 Comments:

  1. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.திருமதி.நளினி சிதம்பரம் அனைவரும் கவனிக்கவேண்டியவரிகள்.நல்லதீர்ப்பு இன்று!

    ReplyDelete
    Replies
    1. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all.

      Delete
    2. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all. Thanking you.

      Delete
  2. TET is an eligibility test. It cannot be the sole criterion for appointment. Another competitive exam will solve the issues. We have many universities following different syllabi, different grade n mark system, autonomous clges having different patterns altogether, sem and non-sem patterns, open univ system, dist edn mode...candidates can be from any of the above said category....how can they be rated with a same scale? It is highly illogical....Our law makers should look into the issue with fresh mind and objectivity.

    ReplyDelete
  3. BC&MBC க்கு 3 % மட்டுமே வழங்கியிருக்க வேண்டும் என்று வாதத்தை வைத்த வழக்கறிஞர் அவர்களே
    உங்களுக்கு பணம் கிடைக்கும் என்றால் எதை வேண்டுமானாலும் செய்வீர்களா ?
    எந்த அரசியல் சட்டத்தில் சமமாக சலுகை வழங்க கூடாது என்று விதிமுறைகள் உள்ளது.?
    ஏன் பிற்பட்ட மக்கள் மட்டும் மண்ணை தின்றாலும் செறித்துவிடுமா ?
    இது நாள் வரை பிற்பட்ட மக்களை ஏமாற்றியது போதும்.இன்று தங்கள் சுயநலத்துக்காக இடஒதுக்கீட்டில் சமமாக தளர்வு வழங்கியது தவறு என்று வாதிடும் நீங்கள் பிற்பட்ட மக்களை மீண்டும் படுகுழியில் தள்ளி புதைத்து கொன்று விடலாம் .

    ReplyDelete
    Replies
    1. Bc & mbc nu parkathey........ ealaikal eanru parrrrr

      Delete
    2. Sir neenga solrathu correct than,but sc/ st ikku ethiraga vankodumai innum nadanthukitu irukku ungalukku theriuma? Avanga vazhai tharam uyaarthal mattumay intha samugam avangala ethum pannathu mattrapadi ....

      Delete
    3. மணிமுருகன் அவர்களே,
      நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம், வன்கொடுமை நடந்தால்
      தண்டிக்க சட்டம் உள்ளது, அதை சரியாக பின்பற்றலாம், அதே நேரம்
      அவர்களுக்கு படிப்பதற்கு ஸ்கால்ஸிப் போன்ற உதவிகள் செய்யலாம்
      அவர்களை உயர்த்தி சமமாக்குவது நோக்கமாக கொண்டால் ஏற்றுக்கொள்ளலாம், அதே நேரத்தில் அதை அட்வான்ஸாக எடுத்துகொண்டு அவர்களை மட்டும் உயர்த்தி மற்றவர்களை அடிமையாக்கி கொண்டிருக்கும் இத்தகைய செயல்களை என்னவென்று
      சொல்வது? வன்கொடுமை என்றா? வன்கொடுமைகளுக்கெல்லாம்
      வன்கொடுமை என்றா? மேட்டினை வெட்டி பள்ளத்தை நிரப்பி சமமாக்கினால் இந்தியா என்னும் சம மட்ட நிலத்தில் பயிர் செய்யலாம், தவிர்த்து மேட்டை பள்ளமாக்கி பள்ளத்தை மேடாக்கிவிட்டால் பழைய நிலைதான் தலைகீழாக இருக்கும், இருந்த
      இடமும் நாசமாகிவிடும், இதை உணர்ந்தால் தான் முன்னேற்றம் ஏற்படும்.

      Delete
    4. Avargal innum uyaravilai enru solkirean,current tet selection list paper 1LA obc quato LA oru sc St kuda kidaiyathu,because mattavargalukku kidaikura vasathi vaipu avangalukku illa,hills LA iruthu 40km higher secondary padikka varanga,athuvum mattum illa ,hills LA irukkura primary schools ikku teacher s poga mattranga

      Delete
    5. நண்பர் அம்சபாண்டியரே ...
      பொது 31
      பி சி -30(உள் ஒதுக்கீடு பி சி எம் -3.5)
      எம் பி சி -20 
      எஸ் சி -15 எஸ் சி ஏ -3எஸ் டி -1. என்ற இந்த முறையை அரசு மீறாது.
      வெறும் 19% இடங்கள் மட்டுமே பட்டியல் இனத்தவர்கு.... பொது 31% ல் அதிகம் இடங்களை கைப்பற்றுபவர்கள் எந்த இனத்தவர் என்பது நாம் அறிந்ததே... அதனை குறை சொல்ல மாட்டேன்.. ஏனெனில் அவர்களே (பொது பட்டியல்) உண்மையான திறமைசாலிகள் ".....
      இப்போது தங்களுக்கு நன்றாக புரிந்ததா நண்பரே "பள்ளம்,மேடு"

      Delete
    6. 30+20=50 மேலும் 31 ல் அதிக இடங்கள் ....... இட ஒதுக்கீடு என்பது இல்லையெனில் என்றும் நீங்கள் "ஆண்டயாக " ... நாங்கள் உங்கள் "அடிமைகளாக"........
      நாங்கள் தலைமுறை தலைமுறையாக உங்களுக்கு
      "அடிமை சேவகம" செய்ய விரும்பினால் இட ஒதுக்கீடை அழித்துவிடுங்கள். .....

      மன்னிக்கவும் -என் பதிவுகள் உங்களை/ வாசகர்கள் யாரையும் மனம் நோக செய்திருந்தால்...நன்றி

      Delete
    7. ராம ராம ராமரே ஒரு விடயம் தெரியுமா நான் உங்களுக்கு அனுப்பவில்லை, காப்பியாகி இருந்திருக்கிறது, நான் கூட நீங்கள்

      "(வணக்கம் ...போராட்டகாரர்களிடம் தாங்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் சார்பில் பதிலுரையை தந்தும் விட்டனர் ..... மேற்கொண்டு இது போன்று அவர்களை உணர்ச்சிவசப்படும் வகையில் பதிவிட வேண்டாம் .....
      . இதற்கு மேலும் தாங்கள் மோதலை தொடர விரும்பினால் தங்களுக்கென்று தான் தனி தனியே தளங்களை அமைத்து உள்ளீர்களே.அங்கே செல்லவும்)"

      இவ்வாறு கூறியிருப்பதை பார்த்து
      ஒரு வேளை நடுநிலையாக சொல்கிறாரோ என்று நினைத்தேன்,
      தற்போதுதான் தெரிகிறது தாங்கள்தான் மோதலை உருவாக்கி
      குளிர்காய நினைப்பர் என்று.

      எப்படி என்றால் ஆதாரம் தாங்கள் வெளியிட்டுள்ள கீழ்கண்ட
      தங்களின் பதிலிலேயே இருக்கிறது,("நீங்கள் "ஆண்டயாக " ... நாங்கள் உங்கள் "அடிமைகளாக"........
      நாங்கள் தலைமுறை தலைமுறையாக உங்களுக்கு
      "அடிமை சேவகம" செய்ய விரும்பினால் இட ஒதுக்கீடை அழித்துவிடுங்கள். .....)" இப்படிபட்ட இழிவான வார்த்தைகளை
      பயன்படுத்தித்தான் சாதிய வன்முறைகளை துாண்டி அதில்
      சுயலாபம் தேடுகிறீர்கள் அதுமட்டுமல்லாது இந்த தளத்தினை பயன்படுத்த கூடாது என்று கூறுவதற்கு நீங்கள் யார்?
      கருத்துரிமை எல்லோருக்கும் உண்டு, விரும்பினால்
      படியுங்கள் இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள். நியாயமானவரை போன்ற வேடம் போடாதீர், நன்றாக என் கருத்தை உன்னிப்பாக
      பாருங்கள் சமமாக்க வேண்டும் என்பதே என் கருத்து, அதில்
      எவ்வாறு குற்றம் கண்டுபிடித்து பிரச்சினையை உண்டாக்க
      நினைக்கும் உங்களை போன்றோர்களை அனைவரும் அடையாளம்
      கண்டுகொண்டுதான் இருக்கிறார்கள்.. வாசகர்களே யாரையும் புண்படுத்தும் நோக்கம எனக்கு இல்லை மன்னிக்கவும்

      Delete
    8. பாண்டி நண்ரே !நீங்கள் கருத்து சுதந்திரம் என்ற. பெயரில் ஒரு பிரிவினரை மேடு என்றும் ஒரு பிரிவினரை பள்ளம் என்று கூறுவது சரியல்ல. வேலை வாய்ப்புகளில் மட்டும் சமவாய்ப்பு கேட்கும் நீங்கள் மற்ற எல்லாவற்றிலும் சமவாய்ப்பு ஏற்றுக்கொள்ள. தயார் என்று கூறுங்கள். உங்கள் கேள்விக்கு நியாயம் கிடைக்கும்.

      Delete
    9. நிச்சயமாக சமவாய்ப்பு அனைத்திலும் வழங்குவதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வேன் என்னுடைய நண்பர்களில் பல பேர்
      SC தான், அவர்கள் வீட்டில் என் சொந்த வீட்டில் இருப்பதை போல்
      உண்டு உறங்கி,விழாக்களில் பங்கு கொண்டு உண்மையான நண்பர்களாய் வாழ்கிறோம்.. பாகுபாடு பார்பவர் அனைத்து தரப்பிலும்
      குறுகிய எண்ணம் படைத்தவர்கள் மட்டுமே என்பதனை பதிவு செய்ய
      விரும்புகிறேன்.

      Delete
    10. மேடு என்றும் பள்ளம் என்றும் கூறுவது ஓர் உதாரண வார்த்தையே தவிர நீங்கள் அர்த்தம் கொள்வதுபோல் ஒரு சாராரை குறிப்பிடுவதற்காக அல்ல. தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம்.
      இது அரசியல் மேடை அல்ல.

      Delete
    11. நான் தவறு என குறிப்பிட்டதை தாங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள் .அந்த தவறு நேற்றைய பதிவு #TET. வழக்கு விசாரணை நாளை தொடரும் # பதிவில் இன்னும். உயிருடனே உள்ளது ....உங்கள் அன்பர் " நான் மகான் அல்ல" பதிவின் கீழே பார்தது விட்டு பதில் அளியுங்கள் ... அதனை மறுபதிப்பு இங்கே செய்ய விரும்ப வில்லை .... கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றவர்களை இங்கு எள்ளிநகையாடினால் என்ன நடக்கிறது என்பதை கண் திறந்து பாருங்கள் ....நான் சொன்ன காரணம் நன்றாக புரியும்

      Delete
    12. தவறாக பதிவு செய்யும் + செய்ய தூண்டும் நண்பர்களை கண்டிப்பதற்கு நான் பாடசாலை நிறுவனராக இருக்க தேவையில்லை... அதை விட உயரிய "பாடசாலை வாசகர்" பொறுப்பே போதும்....

      எது ஐயா குளிர்காய்தல் ???
      எங்களது 19% இடங்களை பாதுகாக்க நினைப்பதா ???
      எது நியாயம் ???
      இட ஒதுக்கீட்டை அழிப்பதா ?? உண்மையில் நீங்கள் மா தைரியவான் .... இந்தியாவின் முதல் குடிமகனால் கூடஅழிக்கவே முடியாத இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் துணிவு கண்டு சொல்கிறேன் ....முடிந்தால் ஒரு வழக்கறிஞரிடமே ஆலோசனை கேளுங்கள் ... அவரும் உங்களை கண்டு "மா தைரியவான்" என்பார்..

      Delete
    13. Mr pandiyan avargaley vitil sapitu vuranginal matum pothathu ungal uravil sontham kitaigumma ungal manam arguma .......

      Delete
    14. Mr.ramram,
      Valgaiyil munnaera mudiyamal vankodumayinal pathikka pattavargalukku ida othukkeedu kandippaga
      taevaithaan....

      Sc pirivil tharam vuyarnthavargal thamaga mun vanthu sc quota yengalukku vaendam yena koorinaal unmaiyilae ungal meethu yengalukku mathippu kooodum...

      Delete
    15. Bcm,sca ,st pondra pirivinarukkuthaan indraya soolnilayil reservation thaevai padukirathu....
      Now a days bc,mbc,sc yellarum open quota vil potti podalam....
      Intha ida othikkeetal pathikka patta vuyar sathiyinarukku thaalthapatta saathiyinar mael vaeruppu varamal pasama varum!
      Yenga kastam yengalukku thaan thaeriyum.....
      marriage yenkira oru event'ah thavira vaera yethukku saathi paakkirom.....
      Chumma saathi saathinu yengalathaan saakatikkeeringa.....

      Delete
  4. Replies
    1. பாபு சார் சரியாக. சொன்னீர்கள்

      Delete
  5. Yes. BABU you are correct but no body insist this in the court because selected candidates do not want to loose the appointment.
    Now some persons who were approached court are those who are got high mark in TET and loose the chance by this weight age system.
    Both expectation is to get appointment based on TET marks.
    The correct solution is as said by you conducting competitive exam for BT and SG as like PG TRB.
    Regarding this if anybody approach the court it will defanatly success.
    WHO WILL DO THIS.?

    ReplyDelete
  6. Today neethi vellum. Vetri nichayam. Good morning to all.

    ReplyDelete
  7. Ennappa idhu midivu eppo kan I theevukku kooda mudivu irukkum pola indha tet kku mudivu ????????

    ReplyDelete
  8. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராடுவது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா ?

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்பிடிங்களா சார்... அப்போ கோர்ட்டில் வழக்கு இருக்கும் போது பணி நியமன ஆனை வழங்கினார்களே , நீங்கள் வாங்கினீர்களே ...... இது கோர்ட் அவமதிப்பு இல்லையா?

      Delete
    2. Mr. Gunasekaran உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா. எங்கே தீா்ப்பு வரும் வரை பணி நியமன ஆணை வேண்டாம் என கூறி திரும்ப ஒப்படையுங்கள் பாா்ப்போம்.

      Delete
    3. சட்டத்தை மதிக்காத, நீதி மன்ற தீர்ப்பையும் மதிக்காத எவ்வளவு பிரச்சினை நம் நாட்டில் இருக்கிறது. வெளிப்படையாக கூற இயலாமைக்கு வருந்துகிறேன். தனிமனித உரிமை யை கேட்பது நீதி மன்ற அவமதிப்பா?

      Delete
    4. Ethi mathikirarkal intha tamil natil
      Sataam pesinal thapu

      கோர்ட்டில் வழக்கு இருக்கும் போது பணி நியமன ஆனை வழங்கினார்களே

      Ithu right aaaa

      சட்டத்தை மதிக்காத, நீதி மன்ற தீர்ப்பையும் மதிக்காத எவ்வளவு பிரச்சினை நம் நாட்டில் இருக்கிறது

      Inthanilamai iniyum maruma
      Poruthiruthu parka vendum


      Eppavumay ippatiyavaa

      Pesama court I mudividungal yarum thadai koduka mudiyathu

      நீதி மன்ற தீர்ப்பையும் மதிக்காத

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  9. உள்ளத்தில் கெட்ட உள்ளம் (இனி) உறங்காதென்பது வல்லவர்(நீதியரசர்) வகுப்பாரடா,

    (தேர்வானவர்கள்) ஊர் பழி ஏற்றாயடா செல்லா..
    நானும் (லிங்கம்) உன் பழி கொண்டேனடா,..

    செஞ்சோற்று கடன் (வசூல்) தீர்க்க (எதிர்கட்சிகள்)ேசேராதயிடம் சேர்ந்து வஞ்சத்தில்(அரசியல்) வீழந்தாயடா லிங்கா வருவதை (FIR ) எதிர்கொள்ளடா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ...போராட்டகாரர்களிடம் தாங்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் சார்பில் பதிலுரையை தந்தும் விட்டனர் ..... மேற்கொண்டு இது போன்று அவர்களை உணர்ச்சிவசப்படும் வகையில் பதிவிட வேண்டாம் .....
      . இதற்கு மேலும் தாங்கள் மோதலை தொடர விரும்பினால் தங்களுக்கென்று தான் தனி தனியே தளங்களை அமைத்து உள்ளீர்களே.அங்கே செல்லவும்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. எப்படிப்பா...ஆஆஆ,, எப்படி? உஸ்ஸ்....இப்படி எல்லாம் வெளியில்
      சொல்லக் கூடாது. சண்டைக்கு வருவாங்களா இல்லையா?

      Delete
    4. நண்பர் திரு.அம்ச பாண்டியரே ... தங்களிடம் இந்த வலைத்தளத்தில் உள்ள ஒரு தவறான பதிவை உங்களது மெயில் க்கு அனுப்பிட விரும்புகிறேன் ... அதனை பார்த்தால் நான் ஏன் மேற்கண்டவாறு எழுதினேன் என்பது புரியும்... தங்கள் மெயில் அட்ரஸ் பதியவும் ... நன்றி ....

      Delete
    5. தமிழக பள்ளி ஒன்றில் அம்பேத்கர் குறித்த
      பாடத்தை நடத்த சில மாணவர்கள் எதிர்ப்புத்
      தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
      கடந்த வாரம் விருதுநகர் மாவட்டம்
      திருத்தங்கலில் உள்ள சீ.ரா. அரசு மேல்
      நிலைப் பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட
      மாணவர் மீது வேறு சமூகத்தைச் சேர்ந்த
      மாணவர்கள் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட
      பரபரப்பு அடங்கும் முன்பாக,
      அதே பள்ளிக்கூடம் தொடர்பாக
      மற்றொரு சர்ச்சை உருவெடுத்துள்ளது.
      அந்தப் பள்ளிக்கூடத்தில், இந்திய அரசியல்
      சாஸன நிர்ணய சபையின் தலைவராக இருந்த
      டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குறித்த
      பாடங்களை நடத்துவதற்கு சில குறிப்பிட்ட
      சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்புத்
      தெரிவிப்பதாக ஊடகங்களில் செய்திகள்
      வெளியாகியுள்ளன.
      இது குறித்து அந்தப் பள்ளியில் படிக்கும்
      மாணவர் ஒருவரிடம் கேட்டபோது, அம்பேத்கர்
      குறித்த பாடத்தை ஆசிரியர் நடத்தினால், சில
      சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள்
      சத்தம்போட்டு பாடம் நடத்த விடாமல் செய்வார்கள்
      என்று தெரிவித்தார்.
      மாணவர் வெட்டப்பட்ட பிறகு தசெப்டம்பர் 5ஆம்
      தேதி நடந்த அமைதிக் கூட்டத்தில் அம்பேத்கர்
      குறித்த பாடம் நடத்த முடியால்
      இருப்பது குறித்த தீர்மானம் ஒன்றும்
      நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
      குழந்தைகளிடம் ஜாதி உணர்வா?
      இது குறித்து மதுரையிலிருந்து செயல்படும்
      தன்னார்வத் தொண்டு நிறுவனமான எவிடன்ஸ்
      அமைப்பின் கதிரிடம் பேசியபோது, ஏழாம்
      வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்கள்
      இப்படி எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் எனில்
      இந்தப் பகுதிகளில் குழந்தைகள்
      மனதிலேயே ஜாதி உணர்வு ஊட்டப்பட்டிருக்கிற
      கூறினார்.
      அம்பேத்கர் குறித்த பாடங்களை நடத்தவிடாமல்
      மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாக
      கூறப்படுவது குறித்து விருதுநகர் மாவட்ட
      முதன்மை கல்வி அதிகாரி ஜெயகுமாரிடம்
      கேட்டபோது, இப்படி சம்பவங்கள் நடந்ததாக சிலர்
      கூறியிருப்பதாகவும், அப்படிச் செய்தவர்கள்
      மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்
      என்று தெரிவித்தார்.
      இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல்
      இருப்பதற்கு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்
      அவர் கூறினார்.
      ஆனால், இந்தப் பகுதிகளில் குழந்தைகள் மிகச்
      சிறிய
      வயதிலிருந்தே ஜாதி உணர்வோடு வளர்க்கப்படு
      பிரச்சனைக்குக் காரணம் என்கிறார் கதிர்.
      திருத்தங்கல் பள்ளியில் நடக்கும் சம்பவங்கள்
      ஒரு உதாரணம் மட்டுமே என்று குறிப்பிடும்
      சமூக ஆர்வலர்கள், இப்பகுதியில் நிலவும்
      ஜாதிப் பாகுப்பாட்டை நீக்க
      பாடத்திட்டத்திலேயே தீண்டாமை ஒழிப்பு இடம்ப
      வேண்டும் என்கிறார்கள். தவிர,
      வேறு பகுதியைச் சேர்ந்த
      ஆசிரியர்களை இங்கிருக்கும்
      பள்ளிக்கூடங்களில் நியமிக்க வேண்டும்
      என்றும் கூறுகின்றனர்.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. நண்பர் வசந்த் அவர்களே ...
      சிலரை பொருத்தவரை அம்பேத்கர் சட்ட மாமேதை .... பலரை பொருத்தவரை அம்பேத்கர் ஒரு தலித் தலைவர் ....

      நண்பர்.அம்சபாண்டியரே ....
      என்னை குறிப்பிட்டு ஏன் பள்ளம், மேடு விளக்கம் ????
      ஆனாலும் உங்களுக்கான என் விளக்கம் இதோ.....
      ஸ்காலர்ஷிப் அனைத்து பிரிவினருக்கும் உண்டு ...
      மதிப்பெண் சலுகை ஒருவருக்கு வழங்கப்பட்டதால் அந்த பிரிவினருக்குள்ளே தானே போட்டி கூடும் ????? ஒரு பட்டியல் இனத்தவர்கு வழங்கினால் ஒரு பி சி தேர்வருக்கு எப்படி பாதிப்பு என்கிறீர்கள்????
      தற்போது வழங்க பட்ட சலுகையால் விளைவு மேடு மேலும் மேடானது ... பள்ளம் சற்றே மேடானது ...

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. தாங்கள்தான் BC,MBC க்கு 5% இட ஒதுக்கீடு வழங்கியது தவறு என்று
      வாதிட்டீர்கள் மற்ற யாரும் SC க்கு 5% க்கு வழங்கியது தவறு என்று
      வாதிடவில்லை, இதிலிருந்து தெரியவில்லையா தங்களின் எண்ணம்
      தான் தவறு என்று.

      Delete
    10. ஐயா தங்களுக்கு நான் அனுப்பிய மெயில் பார்க்கவே இல்லையா ?? தங்கள் மெயில் அட்ரஸ் மீண்டும் பதியவும் ....

      Delete
    11. தங்களது 04-29பதிவில் உண்மையில்லை ..... ஆதாரங்கள் உண்டெனில் உங்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்.... தாங்கள் நிரூபிக்காவிட் டால் ????

      Delete
  10. அப்போ, இந்த போராட்டம் SC கேன்டிடேட்டிர்க்காக மட்டும் தானா?

    ReplyDelete
  11. How to enter comments in Tamil language. Please Tell me.

    ReplyDelete
    Replies
    1. Mr. prabahar NHM Writer அப்டீன்னு ஒரு சாப்ட்வோ் இருக்கு அதை உங்க சிஸ்டத்தில் இன்ஸ்டால் பன்னுங்க அப்புறம் தமிழ டைப் பன்னுங்க மேலும் விபரங்களுக்கு 9751795612

      Delete
    2. தமிழில் எழுத என்று பாடசாைைலையின் வலப்புறத்தில் இருக்கிறது,
      அதில் சென்று டைப் செய்து கொள்ளலாம் அதை காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளவும்

      Delete
    3. Thanks Mr.Dhanesh Kumar & Mr.Amsa Pandian.

      Delete
  12. BC. & MBC. க்கு எதிராக. சதி சதி, கோர்ட்டில் BC. & MBC. க்கு 3% என்று கூறி சதி செய்கிறார்கள், BC. & MBC. க்காரர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளாதீர் .. நமக்கு ( BC. & MBC) எதிராக. சதி நடக்கிறது

    ReplyDelete
    Replies
    1. yes sir.ippathan namakku arivu varuthu

      Delete
    2. ஏன் இப்போது தேவையில்லாமல் community problem பன்ரிங்க? போராட்டம் வெற்றியை நோக்கி போகும் போது நம் ஒற்றுமையை பிரிக்க யாரோ செய்த சதி தான் இது...

      Delete
    3. அப்போ BC. & MBC. க்கு தகுதி தேர்வில் 3% தான் சலுகை தந்திருக்க. வேண்டுமென்று நீதிமன்றத்தில் அவர்கள் (நளினி சிதம்பரம் மேடம்)எடுத்துக் கூரியதாக. குருகுலம்.கம், பாடசாலையில் வெளியிட்ட. தகவல் தவறா ??????

      Delete
  13. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராடுவது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா ?

    ReplyDelete
    Replies
    1. கோர்ட்டில் வழக்கு இருக்கும் போது பணி நியமன ஆனை வழங்கினார்களே
      இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா ?
      Ungaluku oru nithi matravarkalu oru nithiya

      Delete
    2. குணேசகரன் அவர்களே..
      நீங்கள் சென்று நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடருங்கள்..
      இல்லை என்றால் அவதூறு வழக்கு தொடருங்கள் இதுதான் தற்சமயம் பிரபலமாக உள்ளது. .

      Delete
    3. Court already directed to issue appointment order. mind it first. After getting the permission only , counselling was conducted. On 03.09.2014, stay was given. At that date, counselling only conducted .

      Delete
    4. நண்பர் திரு.பாபு பிரசாத் அவர்களே....

      உங்க ஊரில் உள்ளவர்களுக்கு மட்டும் கலந்தாய்வு சென்ற ஆசிரியர்களுக்கு அப்பாய்ன்ட்மெண்ட் ஆர்டர் கொடுத்துட்டாய்ங்களா??????!!!!!


      நீதிமன்ற உத்தரவு படி கலந்தாய்வு மட்டுமே நடைபெற்றது நீங்கள் கூறுவதுபோல் யாருக்கும் ஆர்டர் கொடுக்கல....

      இனியும் போராட்டக்காரர்களின் போராட்டம் நடத்த கூடாது ஏனெணில் நீதிமண்ற தீர்ப்பு விரைவில் வரும்...

      Delete
  14. டெட் weitage பற்றிய பிரச்னையை ஆராய 5 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளதாகவும், அது பற்றிய விவரத்தை வெளிப்படையாக அறிவிக்காமல் வைத்துள்ளதாகவும் நம்ப தகுந்த தகவல் வந்துள்ளது. அக்குழு அணைத்து பிரச்னைகளையும் ஆராய்ந்து புதிய GO வெளிஇடும். இது தற்காலிக தீர்வாக இல்லாமல் நிரந்தர தீர்வாக இருக்கும். weitage method சரியானது என்று இதுவரை யாரும் ஏற்றுகொள்ளவில்லை. அரசும் இதை விரும்பவில்லை.அதனால் அனைவரும் ஏற்றுகொள்ளும் படியான தீர்வை ஏற்படுத்த அரசு விரும்புகிறது. அதனால் தான் மதுரை கோர்ட் தடையாணை எதிரான மேல் முறையிட்டு மனுவை அரசு தாக்கல் செய்யவில்லை. 5 பேர் கொண்ட குழு விவாதித்த கருத்துகள் சில

    * இது தகுதி தேர்வு தான். எனவே தகுதி தேர்வின் அடிபடையில் பணிநியமனம் செய்ய முடியாது. இதற்கு வேறொரு முறையை கடைபிடிக்க வேண்டி இருக்கிறது.

    * தற்போதைய weitage method பாரபட்சமாக உள்ளது . எனவே முழுவதுமாக நீக்க ஆலோசனை (+2, டிகிரி ,B.ed mark முழுவதுமாக நீக்கபடும் )

    * pg trb போல் seniorityகு mark அளிக்க ஆலோசனை செய்து வருகிறது (5 mark or அதிக பட்சமாக 10 mark).

    * இப்போது பாஸ் செய்தவர்களுக்கு அடுத்த தேர்வில் முன்னுரிமை அளிக்க ஆலோசனை (5 mark வரை).
    (ஏனென்றால் அடுத்த ஆண்டு பணிநியமன நேரத்தில் முன்னர் டெட் தேர்ச்சி பெற்றவர்கள் கொடிபிடிக்கலாம்)

    * இன்னொரு தேர்வு வைத்து தேர்வு செய்யவும் ஆலோசனை செய்து வருகிறது ( அவரவர் major subject). இந்த method தான் அண்டை மாநிலமான கேரளாவில் எந்த பிரச்னையும் இன்றி நடைபெறுகிறது.

    இதில் கடைசி பாயிண்ட்ய் தவிர மற்ற அனைத்தையும் அரசு பெரும்பாலும் ஏற்று கொள்ளும் என தெரிகிறது. இன்னொரு முக்கியமான பாயிண்ட். இவை அனைத்தும் கோர்ட்டின் முடிவை பொறுத்தே இருக்கும் எனவும். ஒருவேளை கோர்ட்டில் தடையாணை நீக்கபட்டால் இப்போது செலக்ட் ஆனவர்கள் பணியில் சேர்வார்கள். குழுவின் பரிந்துரைகள் அடுத்த பனிநியமனதிற்கு நடைமுறைக்கு வரும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. நீதிமன்றம் பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. இது ஒன்றும் புதுமையானது இல்லை.

    கண்டிப்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவூ செய்துள்ள சீனியர்கள் வேலைக்கு வந்தால் மிகவூம் சந்தோஸம் தான். முதலில் பதிந்தவருக்கு முதலில் வேலை என்பது சிறந்த முறைதான்.

    தமிழக அரசு ஏதே தேர்தல் சமயத்தில் ஓட்டு வாங்குவதற்காக 55 சதவீதம் எடுத்தால் போதும் என்று அறிவித்தது. ஏற்கெனவே 60 சதவீதம் மேல் எடுத்தவருக்கு சான்று சரிபார்ப்பு எல்லாம் நடத்தி முடித்து வேலைக்கு செல்லும் நேரத்தில். தமிழக அரசு 55 சதவீதம் எடுத்தால் போது என்று 60 சதவீதம் மேல் எடுத்தவருக்கு நிகரானவர் என்று சொல்லி இருக்கிறது.

    கல்லூரி தேர்வூ மற்றும் 60 சதவீதம் எடுத்தால் முதல் வகுப்பு அதற்கு குறைவாக எடுத்தால் இரண்டாம் வகுப்பு. சில அரசு வேலைக்கும் கூட முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களை தான் கேட்கிறார். இரண்டாம் வகுப்பு என்றால் அழைக்கவே மாட்டார்கள். இது ஒன்றும் தவறு என்று நான் சொல்ல வில்லை.

    ஒரு தேர்வூ அதற்கான விதிமுறைகளை வெளியிட்டு அதில் 60 சதவீதம் மேல் எடுத்தவர்களுக்கு அவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் வேலையில் அமர்த்தப்படுவார்கள் என்று கூறிய தமிழக அரசு. அதற்கான அனைத்து பணிகளையூம் முடித்து விட்டு வேலை வழங்கிவிட்டு பிறகு அறிவிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்கவே இருக்காது.

    ஏற்கெனவே 1 : 3 என்று தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கும் போது 55 சதவீதம் மதிப்பெண் சலுகையால் 1 : 6 என்று கணக்கில் தேர்ச்சி பெற்றவர்கள் வந்தனர். இவர்களுக்குள் எப்படி வடிக்கட்டுவது என்று தமிழக அரசே நீதிமன்றத்தை அணுகி வெயிட்டேஜ் என்று புதிய முறையை அறிமுகப்படுதியது.

    இந்த வெயிட்டேஜ் முறை என்பது ஒரு சிலருக்கு தான் சாதகமாக இருக்கும். அதாவது 20 ஆணடுகளுக்கு முன்னர் படித்த 12ம் வகுப்பு மார்க் டிகரி மார்க் பி.எட் மார்க். போன்றவைகளை சேர்த்து வெயிட்டேஜ் போடப்பட்டுள்ளது.

    12ம் வகுப்பு பாடத்தில் பல பரிவூகள் உள்ளது. பல்கலைக்கழகத்தில் ஒரே பாடத்திட்டமும் இல்லைஇ அப்போது பி.எட். படிப்பும் அந்தந்த பல்கலைகழகங்கள் ஏற்ப மாறுப்பட்டதாக இருந்தது. சில ஆசிரியர்கள் பி.எட் தங்கம் பெற்றவர்கள் கூட இந்த வெயிட்டேஜ் அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சிலர் வெயிட்டேஜ் வேண்டாம் என்று தீர்ப்பு வந்தால் செலகட் ஆன 12000 ஆசிரியர்களுக்கு வேலை பறிபோகும் நிலை உள்ளது என்று தவறாக பிரச்சாரம் செய்கின்றார். அது அப்படி இல்லை சுமார் 1000 முதல் 2000 ஆசிரியர்கள் மட்டுமே இதில் பாதிப்பார்கள். அந்த 1000 முதல் 2000 வரை புதிய ஆசிரியர்கள் அதாவது 40 வயதுக்கு மேல் உள்ள இன்னும் நிறைய ஆசிரியர்களுக்கு இது கிடைக்கும்.

    இந்த வெயிட்டேஜ் இருந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் பி.எட். கல்வியியல் கல்லூரி இழுத்து முடவேண்டும். எத்தனையே பேர் பி.எட். படித்து முடித்திருப்பாரகள்இ படித்துக் கொண்டிருப்பாகள்இ படிக்கலாம் என்று இருப்பார்கள். அவர்களுயை 12 மற்றும் டிகரி மதிப்பெண் குறைவாக இருந்தால் அவர்களால் ஆசிரியர் வேலைக்கு வரவே முடியாது. பி.எட் படிப்பில் கஷ்டப்பட்டு படித்த தங்க மெடல் வாங்கினாலும்இ அவர்கள் முன் படித்த படிப்புகளில் குறைவாக மதிப்பெண் பெற்றிருந்தால் ஆசிரியர் வேலை என்பதே கிடைக்காது.

    ஆகையால் 6 இலட்சம் ஆசிரியர்கள் பாதிக்காத வண்ணம் நீதிமன்றம் ஒரு நல்லதொரு தீர்ப்பை வழங்கிடும் என்பதில் துளிஅளவூம் மாற்று கருத்து இல்லை.

    ReplyDelete
  18. Dear Selected candidates,
    Be prepare for everything. If Court or Govt change anything in G.O.NO:71, immediately file cases without hesitation. For example, if they give marks for seniority , it is also unacceptable. Because it was not included in 2012.
    Also the people who are protesting now , what they had done in the 2012.
    karunanidhi or stalin , ramdoss, vaiko will give appointment order when they become CM.

    ReplyDelete
  19. இன்றைய வழக்கின் நிலைபற்றி தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. CASE IPPOTHAIKU MUDIYATHU
      WAIT 4 WEEKS

      Delete
  20. அமலில் இருந்த தகுதிகாண் மதிப்பெண் முறையில் குழப்பம் இருந்ததாலேயே சமர்பிக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில் -  நியமன வேளைையிலும் தடையாணையை நீதிமன்றம் அவசரமாக பிறப்பித்தது.

    தடையாணைக்காக சமர்பிக்கப்பட்ட வாதங்களுக்கு எதிராக அரசு நடைமுறையில் உள்ள தகுதிகாண் மதிப்பெண் முறை சரியே என குறிப்பிட முடியாத சூழலில் தான் - மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் - ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த தகுதிகாண் மதிப்பெண் வழக்கை சந்திக்க முன் வந்துள்ளது.

    அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட பட்டியலுக்கும் தடையாணை தொடர்வதால் -  தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை
    பணிநியமனம் செய்ய 'எவ்வாறான தகுதிகாண் மதிப்பெண் முறையை' கடைபிடித்து மேற்கொள்வது என்பதை மிகவிரிவாக விரைவில் நீதிமன்றம் தீர்ப்பெழுத(இந்த வாரத்தில்) உள்ளது.

    தடையாணை வரை வந்துள்ள தகுதிகாண் மதிப்பெண் முறை பகுதியளவேனும் மாற்றம் பெற 100% வாய்ப்புகள் உள்ளது.

    தனிநீதிபதி ஒருவர் தகுதிகாண் மதிப்பெண் முறையை நிர்ணயம் செய்ய வாய்ப்பில்லை. கட்டாயம் - அரசு சார்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகள், பொது கல்வி ஆலோசகர்கள், நீதிபதிகள் அடங்கிய குழுவை நீதிமன்றமே அமைத்து நியமனம் செய்ய ஆணை பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

    அவ்வாறு நடைபெற்றால் தெரிவு செய்யப்பட்ட பட்டியலில் உள்ள 70% நபர்களுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனென்றால் தகுதித்தேர்வு மதிப்பெண்ணிற்கு அதிக  முக்கியத்துவம் 80-90 % தரப்படலாம். முதுகலை ஆசிரியர் (PG TRB) நியமன தகுதிகாண் மதிப்பெண் முறை போல் 5% மதிப்பெண் - B.Ed பயின்ற பின்பு பெற்ற கற்பித்தல் பணிஅனுபவத்திற்கும்(TEACHING EXPERIENCE), 5% மதிப்பெண் - B.Ed பதிந்த பின்பும் உள்ள வேலைவாய்ப்பு முன்னுரிமைக்கும் வழங்கப்படலாம்.

    தெரிவு செய்யப்பட்ட பட்டியலில் உள்ள 70% நபர்களுக்கு எந்த தகுதிகாண் மதிப்பெண் முறையை கடைபிடித்து நியமனம் மேற்கொள்ளப்பட்டாலும் பாதிப்பு வராது. மீதமுள்ள 30% தேர்வர்களது தெரிவு - நீதிமன்றம் மாற்றி அமைக்கும் தகுதிகாண் மதிப்பெண் முறையால் மாற வாய்ப்புள்ளது.
    இதுவே யதார்த்தமான உண்மை.

    ஏற்கனவே கடைபிடித்து வந்த தகுதிகாண் மதிப்பெண் முறையை நீதிமன்றம் (தனி நீதிபதி) தான் வரையறை செய்தது. வரையறை செய்ததை அரசு அமல்படுத்த அரசாணை பிறப்பித்தது.

    திருத்தியமைக்கப்பட்ட தகுதிகாண் மதிப்பெண் முறையை நீதிமன்றம் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டால் அரசு விரைந்து புதிய அரசாணை பிறப்பித்து புதிய நியமன பட்டியல்படி பணிநியமனம் மேற்கொள்ள தயாராகும். 

    ReplyDelete
  21. நீதிபதிகள் வடிவில் இறைவன்
    இன்று காலை 11 அளவில் TET குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 5 முக்கிய வழக்குரைஞ்சர்களும் அரசு சார்பாக 5 வழக்குரைஞ்சர்களும் ஆஜராகி வாதாடினார்கள்.அமர்வு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் திரு.அங்கோத்ரி அவர்களும் திரு.மணிஷ்குமார் அவர்களும் வழக்கை விசாரித்தனர்.

    காலையில் 5% தளர்வு முன் தேதியிட்டு வழங்கியது செல்லாது என்று வாதாடிய வழக்குரைஞ்சர்களுக்கு 5% தளர்வு வழங்குவதும் வழங்காததும் அரசின் கொள்கை முடிவு என்று நீதிபதிகள் தீர்க்கமான வார்த்தைகளை உதிர்த்ததாக தெரிகிறது.எனவே 5% தளர்வு குறித்து யாரும் பயம் கொள்ள வேண்டாம்.

    அடுத்து G.O 71 க்கு எதிரான வாதம்.இந்த வாதத்தின் போது தமிழகத்தில் பல்வேறு பாடத்திட்டம்(syllabus) பின்பற்றப்பட்டு பல்வேறு வகையான வழியில்(medium-CBSC,STATE BOARD.......like that) கல்வி கற்பிக்கப் படுகிறது.எனவே weightage முறையில் அவர்கள அனைவரையும் ஒரே மாதிரி கணக்கில் கொள்வது தவறு என்று வாதிகளின் வழக்குரைஞ்சர்கள் வாதாடினார்கள்..

    அதற்கு மறுப்பு தெரிவித்த மாண்புமிகு நீதிபதிகள், பிற கலந்தாய்வுகளின் பொழுது CBSC க்கு தனியானதொரு கலந்தாய்வும் state board க்கென ஒரு தனியான கலந்தாய்வும் நடைபெறுகிறதா என்ற கேள்வியை அந்த வாதங்களை முன் வைத்த வழக்குரைஞ்சர்களிடமே முன் வைத்தார்.
    அதற்கு சில வினாடிகளுக்குப் பிறகு இல்லையென்றே பதில் வந்தது.

    அதைப்போலவே CBSC,STATE BOARD க்கு என தனித்தனியான weightage மதிப்பெண் வழக்கும் முறை கடை பிடிக்க முடியாது என நீதிபதி அவர்களே தெரிவித்துள்ளார்கள்.

    வாதிகளின் பல கேள்விகளுக்கு நீதிபதிகள் அவர்களே எதிர் கேள்வி கேட்டு நியாத்தை வெளிக்கொணர்கிறார்கள்.

    அரசு தரப்பில் வாதாடும் AG அவர்களும் இன்ன பிற வழக்குரைஞ்சர்களும் சிறப்பாக வாதாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாதங்கள் தற்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.முழுமையான விவாதம் விரைவில் update செய்யப்படும்.

    எல்லாம் நன்மையில் முடிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தகவலுக்கு நன்றி

      Delete
  22. adi dhiravida nathuraikkana 669 vacancy iruka? illaya?
    illa paper -1 total vacancy 1657maddumtana? plz replay frnd.

    ReplyDelete
  23. நண்பர் அம்சபாண்டியரே ...
    நான் தவறு என குறிப்பிட்டதை தாங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள் .
    அந்த தவறு நேற்றைய பதிவு #TET. வழக்கு விசாரணை நாளை தொடரும் # பதிவில் இன்னும். உயிருடனே உள்ளது ....
    உங்கள் அன்பர் " நான் மகான் அல்ல" பதிவின் கீழே பார்தது விட்டு பதில் அளியுங்கள் ... அதனை மறுபதிப்பு இங்கே செய்ய விரும்ப வில்லை .... கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றவர்களை இங்கு எள்ளிநகையாடினால் என்ன நடக்கிறது என்பதை கண் திறந்து பாருங்கள் ....நான் சொன்ன காரணம் நன்றாக புரியும் ....

    ReplyDelete
  24. நான் இட ஒதுக்கீடு கூடாது என்று சொன்னேனா?, நான் அப்படி சொல்லாத போது சொன்னதாக தாங்கள் கூறுவதற்கு பெயர் என்ன?
    சாதிய நோக்கம் யாரிடம் உள்ளது என்பது தெரிகிறதா, அதனால்தான்
    தாங்கள் 'நாங்கள் எங்களுடையது' என்றெல்லாம் பயன்படுத்துகிறீர்கள், நான் போராட்டத்தில் அரசியல் உள்ளது என
    குறிப்பிட்டிருக்கிறேன் ஆனால் சாதியம் உள்ளது என குறிப்பிடவில்லை
    அதேபோல் உங்களுடைய உரிமையை பறிக்கவில்லை. நீங்கள்தான்
    பறிக்க பார்க்கிறார்கள் என பொய்யாக குற்றம் சாட்டுகிறீர்கள்,
    அதனால்தான் குறிப்பிட்டேன் நீங்கள் குளிர்காய நினைக்கிறீர்கள் என்று,
    நீங்கள் என்றால் ராம ராம ராமரை மட்டும்தான் அதற்கும் எங்கள் சாராரை என்று ஏதாவது அர்த்தம் தயாரித்துகொள்ளாமல் இருந்தாலே
    போதும். நன்றி

    ReplyDelete
  25. Sikiram oru mudivuku vanga pa

    ReplyDelete
  26. திரு ராம் ராம் அவா்களே அம்சா பாண்டியன் அவா்களை தங்களின் திறமையான பேச்சுக்களால் மண்ணை கவ்வ வைத்துவிட்டீா்கள். மிக்க மகிழ்ச்சி . ஆனால் நியாயம் என்னவோ நம் பக்கம் இல்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது. நாம் திரும்ப திரும்ப திருமணம் என்ற ஒரு விஷயத்தை காட்டி எங்களில் சொந்தம் வைத்துக்கொள்வீா்களா என்று கூறிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து பதிவு செய்து காத்திருப்போா் எத்தனை போ் என்று உங்களுக்கு தொியுமா. என்னுடைய நண்பா்கள் பலா் என்னோடு இப்போதும் பழகிகொண்டிருப்பவா்களின் சாதி என்ன வென்று எனக்கு தொியாது. எனக்கு தொிந்தவரை அவா் பிசி. எம்பிசி .எஸ்சி. எஸ்டி என்பது மட்டும் தான் தொியும். அதுவும் வேலைக்காக ஒரு சில இடங்களில் விண்ணப்பங்கள் நிரப்ப மட்டும் தான் அதை நாங்கள் தொிந்துவைத்துள்ளோம். இன்னும் சொல்ல போனால் இட ஒதுக்கீடு என்பது ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு மட்டும் வேண்டும் என்று தான் பொியாா் முதலானோா் இதை கொண்டுவந்தாா்கள். ஆனால் அதன் பின்னா் வந்த அரசியல் வாதிகள் நம்முடைய ஓட்டுக்காக அதை தொடா்ந்து நடைமுறை படுத்தியுள்ளனா். படித்த நாம் படிக்காத நம் முன்னோா்களை போல பேச கூடாது. என்னுடைய நண்பா்கள் தற்போது நடந்த டிஇடி யிலும் சாி அதற்கு முன்னா் நாங்கள் எழுதிய எந்த தோ்வானாலும் சாி அதில் நான் வெற்றிபெற்று என்னைவிட அதிக மதிப்பெண் பெற்ற என் நண்பா்கள் வெற்றி பெறாமல் போனது இந்த இட ஒதுக்கீட்டினால்தான். இந்த இட ஒதுக்கீட்டினால் தான் எனக்கும் அவா்களுக்கும் இடையில் ஒரு வெற்றிடம் தோன்றுகிறது. எனவே இட ஒதுக்கீடு வேண்டும் ஆனால் அது சாதியின் அடிப்படையில் வேண்டாம். அவரவா் பொருளாதாரத்தின் அடிப்படையில்தான் வேண்டும். ஒரு சிறிய உதாரணம் ஆனால் உண்மை நிலை-எனக்கு தொிந்த ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தில் அப்பா.அம்மா மகன் ஒருவா் மகள்கள் இருவா் மருமகள் ஒருவா் என 6 போ் ஆசிாியா்கள். அவா்கள் எஸ்சி குடும்பத்தை சாா்ந்தவா்கள். அதே ஊாில் உள்ள ஒரு ஐயா் தனது இரண்டு மகள்களையும் பள்ளியில் படிக்க வைக்க முடியாத அளவுக்கு வறுமையில் ஒரு ஓட்டலில் டேபிள் துடைத்துகொண்டு இருக்கிறாா். இப்போது சொல்லுங்கள் உண்மையில் இட ஒதுக்கீடு யாருக்கு வேண்டும் என்று. நான் சொல்வது கட்டுக்கதையாக தோன்றும். ஆனால் உண்மை. நீங்கள் சொல்வது போல ஆண்டையாக அடிமையாக ஒரு காலத்தில் இருந்து இருக்கலாம். ஆனால் தற்போது எந்த இடத்தில் எந்த துறையிலும் நம் இனத்தவா்களும் சாிநிகா் சமமான இடத்தில் தான் உள்ளனா். பழைய திரைபடங்களை பாா்த்துவிட்டு அதில் வரும் வசனங்களை சொல்ல கூடாது ராம் அவா்களே. பெண் எடுத்து பெண் கொடுப்பத்தால் தான் சாதி இல்லை என்று அா்த்தம் இல்லை. எல்லா இனத்திலும் அவரவா் சாதியில் தான் திருமணம் செய்கிறாா்கள். நம்முடைய இனத்திலும் பல சாதிகள் இருக்கிறது ஆனால் நாமும் நம்முடைய சாதிக்குள்ளாகவே மட்டும் தான் திருமணம் செய்து கொள்கிறோம். நீங்கள் சொல்வதை போல மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு எந்த ஆசிாியரும் செல்லாமல் இல்லை. அங்கேயும் நல்ல முறையில் பள்ளிகள் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. யாரும் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கவில்லை. முதலில் ஒன்றை தொிந்து கொள்ள வேண்டும் இட ஒதுக்கீடு பணியில் மட்டும் இருக்க வேண்டும் தவிர மதிப்பெண்ணில் இருக்க கூடாது. அவா்களுக்கு 90 மதிப்பெண் நமக்கு 82 மதிப்பெண் என்பது எந்த விதத்தில் நியாயமாகும். அவா்கள் 90 எடுத்தால் தான் திறமையான ஆசிாியா் என்றால் நாம் 82 எடுத்தாலே திறமையான ஆசிாியரா? ஏன் அவா்களுடன் நம்மால் போட்டிபோட முடியாதா நம்மாலும் அவா்களுக்கு இணையான மதிப்பெண் வாங்க முடியாதா ? தயவுசெய்து ஆம் என்று சொல்லி நம்மை நமே தாழ்த்தி கொள்ளும்படி செய்துவிடாதீா்கள். 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு கல்லூாி போன்ற இடங்களில் அவா்களுக்கு சமமான மதிப்பெண் பெற்றுதானே நாமும் தோ்ச்சி பெற்றோம் அப்படி இருக்க ஏன் இப்போது நம்மால் முடியாது.

    ReplyDelete
  27. திரு.தனேஸ் குமார் அவர்களே தாங்கள் கூறும் கருத்துக்களைத்தான் நானும் கூறி வருகிறேன், அதை புரிந்து கொள்ளாத தவறான
    எண்ணங்களைத்தான் சுட்டி காட்டியிருக்கிறேன். யாரும் யாரையும்
    மண்ணை கவ்வ வைக்க முடியாது, தவறான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். என் கருத்துக்களை கவனித்து பாருங்கள்
    ஒரு சாராருக்காக நிச்சயம் இருக்காது.சமுக அக்கரை கொண்ட எவரும் அத்தகைய செயலை செய்யமாட்டார்கள். தோற்கவும் மாட்டார்கள், அவர் எந்த சமுகத்தில் இருந்தாலும் சரி.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!