Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Weightage க்கு எதிரான போராட்டம் - தற்போதைய நிலை

           TET Weightage முறை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி வாய்ப்பை இழந்த தேர்வர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்டுவருகின்றனர்.        இப்போராட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் என பல நூறு தேர்வர்கள் தொடர்ந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

  • நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.
  • விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோர் தங்குவதற்காக திருமண மண்டபத்தையும், தனது அலுவலகத்தையும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.
  • கடந்த ஒரிரு நாட்களாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நான்கு டெட் தேர்வர்களும் தற்போது மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு போராட்ட களத்தில் உள்ளனர்.
  • இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத்தலைவர் திரு. தா.பாண்டியன் அவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் ”தற்போதைய வெயிட்டேஜ் முறையானது தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளதால், இதனை நீக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
  • தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திரு. விஜயகாந்த் அவர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  • பாட்டாளி மக்கள் கட்சித் நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  • தொடர்ந்து தற்போது போராட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அமைந்துள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கெதிராக நடைபெற்று வருகிறது.





9 Comments:

  1. உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.

    ReplyDelete
    Replies
    1. UL ARTHAM PURIGIRATHU, ADUTHAVARGALIN UNARVUGALUKUM MATHIPPU KODUKA VENDUM, PLS

      Delete
    2. Im only responsible for what i say..not for what you understand ...neengal epadi purindhukondeergal ena theriyavillai..

      Delete
    3. Avargal poradamal irundhirundhaal edhuvum nadandhirukaadhu...indru anaithu thalaivargalum aadharavu...

      Delete
  2. வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்...


    வாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..




    திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன், கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்


    நன்றி..நன்றி..நன்றி..!

    ReplyDelete
  3. போராட்டம் குறித்த தகவல் அளித்த பாடசலைக்கு நன்றி!

    ReplyDelete
  4. நன்றி..நன்றி..நன்றி..!

    ReplyDelete
  5. உண்மையை உடனுக்குடன் உலகிற்கு சொல்லும் பாடசாலைக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive