Home »
» TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரிய வழக்குகள் தள்ளுபடி-MaalaiMalar
தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு தேர்வுகள் நடத்துகிறது. இந்த தேர்வில், ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை ஆகியவற்றை கணக்கிடும் ‘வெயிட்டேஜ்’ முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றுகிறது.
இதனால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று 2000ம் ஆண்டுக்கு முன்பு பிளஸ் +2 படித்த பட்டதாரி ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய கோரி சுசிலா உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் சலுகை அளித்து தமிழக அரசுபிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலையில் பிறப்பித்தார்கள். அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது: மனுதாரர்கள் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் விதிகளை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரவில்லை. தேசிய கல்வி கவுன்சிலின் விதிகளை பின்பற்றியே தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் முறையை பின்பற்றியுள்ளது.ஆசிரியரின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு இந்த வெயிட்டேஜ் முறையை கொள்கை முடிவாக எடுத்து செயல்படுத்தி வருகிறது. அரசு எடுக்கும் கொள்கைமுடிவில் விதிமுறைகள் மீறி முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அதில் கோர்ட்டு தலையிட முடியும்.ஆனால், இந்த வெயிட்டேஜ் முறையில் அரசின் கொள்கை முடிவு விதி மீறல் இல்லை என்றுநிரூபிக்கப்படவில்லை. எனவே, அரசின் இந்த கொள்கை முடிவில் இந்த கோர்ட்டு தலையிடமுடியாது. வெளியிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்.
ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்க அரசுக்கு அதிகாரம்உள்ளதால், இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Kolgai Mudivu onu edunga da Dted Bed ku employmentla register pana vendamnu...
ReplyDeleteகழகமே கோவில்
ReplyDeleteஅம்மாவே தெய்வம்
அம்மா பல்லாண்டு வாழ்க
மெல்ல நீதி இனி சாகும்
ReplyDeleteஒரு சிக்கலான வழக்கிற்கு ஒரே வரியில் தீர்ப்பு வழங்கி இருப்பது நீதி துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைப்பதாகும், மேம்போக்காக பார்த்தால் எல்லாம் தெரிந்துதானே தேர்வு எழுதினீர்கள் என நீதிபதி கேட்பது சரிதானே என தோன்றும் ஆனால் அது சரியில்லை,
12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக பெற்றவர்களுக்ககு ஏன் கல்லூரியில் இடம் கொடுத்தது இந்த அரசு.
அவர்கள் கல்லூரியில் குறைந்த மதிப்பெண் பெற்ற பொழுது அவர்களுக்கு ஏன் பி.எட் கல்லூரியில் இடம் கொடுத்தது இந்த அரசு.
பி.எட்டில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஏன் தகுதி தேர்வு எழுத அனுமதித்தது இந்த அரசு..
இதில் எதையுமே கணக்கில் கொள்ளாமல் வழங்கப்பட்டது நீதி அல்ல அநீதி.
அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றால், இதே உயர் நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிட்டுதானே வெயிட்டேஜ் முறையை ரத்து செய்தது. அறிவியல் பூர்வமான ஒரு வெயிட்ஜ் முறையை கொண்டுவர அறிவுறுத்தியது. அப்போது மட்டும் எப்படி நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிட்டது??? மாண்புமிகு!!!!! நீதிமான்கள்?????களே பதில் கூறுவீர்களா.
DeleteYes right
ReplyDelete1.வேலை வாய்ப்பு பதிவக மூப்பை கருத்தில் கொள்ளாத போது வேலை வாய்ப்பக அலுவலகத்தில் பதிவு செய்வதன் அர்த்தம் என்ன?
ReplyDelete2. பி.எட். என்பது பொதுக்கல்வி அல்ல. தொழிற்கல்வி. அதை பொறுப்பில்லாமல் வாரி வழங்கிவிட்டு , இப்போது தகுதி தேர்வு என்று வைப்பது என்ன அர்த்தம்? பல்கலைக்கழகங்கள் தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் பட்டம் கொடுத்துவிட்டதா?
3.போட்டித் தேர்வு நடத்தி, அதிக திறமை வாய்ந்தவர்களை தேர்ந்தெடுப்பது என்பது வேறு. தகுதி தேர்வு என்பது பட்டம் கொடுத்த பல்கலைக்கழகங்களை அவமானப்படுத்தும் நிகழ்ச்சிதானே?
4.Objective type கேள்விகளில் மதிப்பெண் வாங்கிவிட்டால் அவர்கள் முழு தகுதி பெற்றவர்களா?
Arsan Andra koilvann' Theivam nendru koillum.
ReplyDeleteNext governers
ReplyDeleteVilai koduthu vaangapatta vetri. Valiyodum kaneerodum vaadum en pondra nanbargale, manam thalaratheergal. Sariyanadhu vendrey theerum.
ReplyDeleteTonight will be one of the painful and long nights. People are lot like tea bags. They do not know their strength, untill they get into hot water.
ReplyDelete