பல தடைகளைத் தாண்டி ஆசிரியர் நியமன கலந்தாய்வில்
கலந்துகொள்ள வந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பேரிடியாக அமைந்தது ஆசிரியர்
நியமனத்துக்கு நீதிமன்றம் விதித்த தற்காலிக தடை.
எந்த ஊர்? எந்த பள்ளியைத் தேர்வு செய்யலாம்? என ஆவலோடு கலந்தாய்வுக்குச் சென்றவர்கள் ஊரைத்
தேர்ந்தெடுத்தும் பணி நியமன ஆணை வழங்கப்படாதது பெரும் அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை
வலுப்பெற்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. திமுக தலைவர் மு. கருணாநிதி,
பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், இ.கம்யூ தலைவர் தா. பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்
உள்ளிட்டோர், பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு
தெரிவித்து வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆசிரியர் தகுதிக்கு ஏற்ற பி.எட்,
டிடிஎட் முடித்தவர்களுக்கு மீண்டும் ஏன் தேர்வு
என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். மற்ற பிரச்சினைகளைப்போல்
அல்லாமல் தலையாய பிரச்சினையாக ஆசிரியர் நியமன பிரச்சினையை கருத வேண்டும். அனைவரும்
ஏற்றுக்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணவேண்டும்
என்றும் அவர் கூறியுள்ளார். 2012ல் டெட் தேர்வு எழுதிய அனைவருக்கும் வேலை வழங்கப்பட்டதால்
வெயிட்டேஜ் பிரச்சினை அப்போது எழவில்லை.
2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு
வெளியானதிலிருந்து பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருந்து வந்தது. கீ-ஆன்சர் தொடர்பான
வழக்கு, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5%
தளர்வு, வெயிட்டேஜ் முறை கணக்கிடுதலில் உள்ள குளறுபடிகள் என
சொல்லிக்கொண்டே போகலாம்.
2013 தேர்வில் மட்டும்
வெயிட்டேஜ் பிரச்சினை ஏற்பட்டதற்குக் காரணம் குறைவான எண்ணிக்கையில் ஆசிரியர்களைத்
தேர்வு செய்தது. குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30,500
பேர்களில் இருந்து வெரும் 1600
பேர் மட்டுமே அதாவது 5% பேருக்கு மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் உண்டு என்பதுதான்
பிரச்சினையின் மூலக் காரணம். மீதமுள்ள 29000 பேருக்கு அடுத்தடுத்து வரும் காலிப் பணியிடங்களில்
நிரப்பிவிடுவோம். தேர்வர்கள் யாரும் கவலைப்படவேண்டாம் என அரசு உறுதி அளிக்கவில்லை.
இதுபோல்
பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கையும் கூடுதலாக நிரப்ப அறிவிப்பு வரவில்லை. 5%
மதிப்பெண் சலுகை அளித்ததால் பெரிய அளவில்
யாருக்கும் பாதிப்பு இல்லை (உதரணமாக:-90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களில் தமிழ் வழியில்
பயின்றவர்கள் 50 முதல்
60 பேர் தான் அணைத்து பாடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
குறிப்பாக தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களை தவிற மற்ற பாடங்களில் 5%
மதிப்பெண் தளர்வை அளித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு
கோடானக்கோடி நன்றியையும் இந்த இடத்தில தெரிவித்துகொள்கிறேன். அப்படி 5%
மதிப்பெண் தளர்வை அளிக்காமல் இருந்திருந்தால்
அந்த இடம் காலியாகத்தான் இருந்திருக்கும். இததன்பின் வந்தவர்களை கொண்டுதான் இந்த
காலிப்பணியிடம் நிரப்பியுள்ளர்கள். அப்படி அறிவிக்காமல் இருந்திருந்தால் மாணவர்களின்
கல்வி தரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கும். இதனை எல்லாம்தான்
கருத்தில்கொண்டு முதல்வர்
அவர்கள் இந்த 5% மதிப்பெண் தளர்வை அறிவித்தார். உதரணமாக TRB இணையதளத்தில்
FINAL SELECTION LIST –ஐ பார்த்தால் அதில் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த
வரிசையில் (NOT AVAILABLE) என்றுதான் குறிப்பிடபட்டுள்ளது. 5% மதிப்பெண் தளர்வை 2012-ஆம் ஆண்டே
அறிவித்து இருந்திருந்தால் இன்று (BV) என்ற இந்த
காலிப்பணியிடம் இருந்திருக்காது). இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளித்த 5%
மதிப்பெண் தளர்வை எதிர்த்தால் எந்த அரசியல்
கட்சியினரும், இந்த சமூகமும், போராட்டத்துக்கு ஆதரவு தரமாட்டார்கள். தற்போது
இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூட 5% மதிப்பெண் தளர்வை எதிர்க்கவில்லை. வயதாகி விட்டதால் இனிமேல்
புதிய தலைமுறை பட்டதாரிகளுடன் போட்டி போட இயலாது. ஆசிரியர் பணிக்கு செல்வதற்கு இது ஒன்றுதான் கடைசி வாய்ப்பு என்பதால்தான் போராட்டம்
உச்சகட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால்தான் செட்பம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான
சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் ஒப்படைக்கப்போவதாக போராட்டத்தில்
ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் சிலர் கூறியுள்ளனர். இது தேவையற்ற ஒன்று. இப்போராட்டம்
தீர்வாகாது.
போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள்
தங்கள் பக்க நியாயத்துக்கு கூறப்படும் காரணங்கள்:
2000-2001 கல்வி ஆண்டுக்கு முன்னர்
படித்த முறை, பாடத்திட்ட முறை, மதிப்பெண் அளிக்கப்பட்ட முறை, அப்போது இருந்த வசதி வேறு. ஆனால் தற்போது உள்ள பாட முறை,
மதிப்பெண் அதிக அளவில் அளிக்கப்படுவது,
தற்போது கல்வி கற்கும் வசதி என வேறுவிதமாக
உள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் பாடத்திட்ட முறை வேறு,
மதிப்பெண் அளிக்கப்படுவது வேறு. கிராமச் சூழல்
வேறு. நகரச் சூழல் வேறு. இரு பிரிவினரையும் சமமாக பார்க்கக்கூடாது.
ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். தேர்வுக்குக் கூட இதுபோன்ற வெயிட்டேஜ்
முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஏன் முதுகலை ஆசிரியருக்குக்கூட இதுபோன்ற முறை
இல்லை. முதுகலை ஆசிரியர் பணி நியமனத்தில் ஆசிரியர் தேர்வுக்கான மதிப்பெண்ணுடன்,
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு,
பணி அனுபவம் ஆகியவற்றுக்கு வெயிட்டேஜ்
மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு பணிநியமனம் செய்யப்படுகின்றன. ஆனால்,
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் இந்த முரணான
வெயிட்டேஜ் முறை ஏன்? என
தேர்வர்கள் கூறுகின்றனர்.
ஏற்கெனவே
சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்துவிட்டதால் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு
சரிபார்க்க மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த முடியாது. எனவே இது
சாத்தியமில்லை.
ஆசிரியர்
தகுதித் தேர்வில் மட்டும் பெற்ற மதிப்பெண்ணை கணக்கிட்டு பணிநியமனம் வழங்க முடியுமா?
என்றால் ஏற்கெனவே 14 ஆயிரம் பேருக்கு பணிநியமன கலந்தாய்வு நடத்தப்பட்டதால்,
இவர்களுக்கு வேலை இல்லை என்றோ,
புதிய முறையில்தான் பணி நியமனம் செய்ய முடியும்
என்றோ கூற இயலாது. கலந்தாய்வில் கலந்துகொண்டவர்களுக்கு பணி நிச்சயம் என்பது
அனைவருக்கும் தெரிந்த நிதர்சனமான உண்மை. தீர்வு என்ன?
1.) ஆசிரியர்
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதமுள்ள அனைவருக்கும் வேலை உறுதி என்பதை அரசு
மிக விரைவில் அறிவிக்கவேண்டும்.
2.) மொத்த
காலிப் பணியிடங்களில், ஆசிரியர்
தகுதித் தேர்வில், 90க்கும்
மேல் மதிப்பெண் பெற்றவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற பாதி பேருக்கும். 82
முதல் 90 மதிப்பெண் பெற்றவர்களில் அதிக மதிப்பெண்,
வயது மூப்பு என கணக்கிட்டு மீதி பாதி
பேருக்கும் பணி நியமனம் வழங்கவேண்டும். அல்லது மீதமுள்ள தேர்வர்களில் வயது மூப்பு
அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.
3.) மேலும் 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களையும், 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் புதிதாக உருவாக்க
வேண்டும்.
4.) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும்
பணியமர்த்தும் வரை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தக்கூடாது. இந்த நடவடிக்கைகளை அரசு
விரைந்து எடுத்தால் மட்டுமே அனைத்து தரப்பினரும் ஏற்கக்கூடிய சுமூகத் தீர்வாக
அமையும்.
கட்டுரை ஆக்கம்-
** என்றும்
அன்புடன் **,
சு.ஆனந்தன், (தர்மபுரி).
----------------------—-
ReplyDeleteமுக்கிய செய்தி
-------------------------
வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.
வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.
வருகின்ற அனைவருக்கும் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வெற்றி வெற்றி வெற்றி
Pls call me
.
Rajalingam...9543079848
Raja...............9442799974
Manimaran.. 9894174462
Thangavel....9003435097
Ponnusamy. 9843311339
Dinesh..........7305383952
Nallenthiran 9003540800
வாழ்க வளமுடன்.
முன்பு பொன்னையன் போன்றவர்கள் அம்மாவுக்குத் தவறானத் தகவல்களைத் தந்தார்கள்,இந்தமுறையும் ஒரு சில அதிகாரிகள் தவறானத்த கவல்களைத்தருவதால்.அம்மா ,கவனமாக இருக்கவும்.நல்ல முடிவைத்தாருங்கள்.
ReplyDeleteஆசிரியர் தின வாழ்த்துக்க்கள்.
ReplyDelete.
ReplyDelete.
.
.
தமிழ் 3000 க்கு மேலும் ,
.
.
.
.
கணிதம் 3000 க்கு மேலும்,
.
.
.
.
ஆங்கிலத்தில் 1000 க்கு மேலும் ,
.
.
.
.
சஎயன்ஸ் ல் 1000 க்கு மேலும்,
.
.
.
.
சமுக அறிவியலில் 500 க்கு மேலும்,
.
.
.
.
வேகன்சி ஆக.......
.
.
.
.
மொத்தம் 8500 புதிய
.
.
.
.
வேகன்சிகளை உருவாக்கி.......
.
.
.
.
இந்த 2013 டேட் கண்டிட்டேட் கொண்டே நிரப்ப வேண்டும்........
.
.
group I,II, IV தேர்வு வெற்றி என்றால் பணி,
ReplyDeleteஆசிரியர் பணியில் மட்டும் ஏன் இவ்வளவு கெடுபிடி
முதலில் TET Exam என்று ஒன்று தேவையில்லை என்றார்கள்.
ReplyDeleteபின்னர் அதிகம் பேர் தேர்ச்சி பெற தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்றார்கள். வழக்கும் போட்டார்கள்.
குறைத்தபிறகு வெயிட்டேஜ் Slab தவறு என்றார்கள். வழக்கும் போட்டார்கள்.
வழக்கின் தீர்ப்பு படி பின்பற்றப்பட்ட வெயிட்டேஜ்-ம் தவறு என்கிறார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை இவர்களுக்கு பணி கிடைக்கும்வரை எந்தவொரு அரசின் கொள்கை முடிவும் , எந்தவொரு நீதிமன்ற தீர்ப்பும் தவறுதான்.
முதலில் TET Exam என்று ஒன்று தேவையில்லை என்றார்கள்.
ReplyDeleteபின்னர் அதிகம் பேர் தேர்ச்சி பெற தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்றார்கள். வழக்கும் போட்டார்கள்.
குறைத்தபிறகு வெயிட்டேஜ் Slab தவறு என்றார்கள். வழக்கும் போட்டார்கள்.
வழக்கின் தீர்ப்பு படி பின்பற்றப்பட்ட வெயிட்டேஜ்-ம் தவறு என்கிறார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை இவர்களுக்கு பணி கிடைக்கும்வரை எந்தவொரு அரசின் கொள்கை முடிவும் , எந்தவொரு நீதிமன்ற தீர்ப்பும் தவறுதான்.
Friends ennala eligibility certificate download panna mudiyala. Two times panniten aanalum sariya aagala. Athuku mela download kodutha two chance complete aaiduchinu varuthu. Ithuku ethavathu oru solution sollunga friends.
ReplyDeleteSame 2 u koli
DeleteLastla download pana address barla irukura addressa copy pani google potu click panunga unga certificate open agum
Deleteடி.ஆர்.பி வெளியிட்டுல்ல ஆசிரியர் தகுதி பெற்றமைக்கான சான்றிதழில் டேட் ஆப் இ சு இல்லை. கவனித்தீர்களா? டி.ஆர்.பி மீண்டும் டேட் ஆப் இ சு வுடன் சான்றிதழ் வெளியிடுமா?
ReplyDelete