கடந்த 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழை, பதிவிறக்கம் செய்துகொள் ளும் வகையில் ஆன்லை னில் டிஆர்பி வெளியிட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு
வாரியம் நடத்தியது. தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. இதில்,
27ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி அடைந்தனர். அதன்பின், கடந்த ஜன. 10ம் தேதி
விடைகளில் மாறுதல் செய்யப்பட்டதில் கூடுதலாக 2 ஆயிரத்து 300 பேர் தேர்வு
செய்யப்பட்டனர். இதையடுத்து, இடஒதுக்கீடு முறையில் தேர்ச்சிக்கான
மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக தமிழக அரசு
குறைத்ததையடுத்து மேலும், 42 ஆயிரத்து 647 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதன்மூலம் ஒட்டுமொத்தமாக தேர்ச்சி அடைந்தவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரமாக
உயர்ந்தது.
இவர்கள் அனைவருக் கும் பகுதி, பகுதியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து
முடிந்தது. தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் வெயிட்டேஜ் அடிப்படையில் பெறும்
கட்&ஆப் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியர் பணி வழங்கப் படும் என
அறிவிக்கப்பட்டு, கட்&ஆப் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், 2013ம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற (முதல் மற் றும்
2ம் தாள்) அனைவருக் கும் ஓராண்டிற்கு பின் டிஆர்பி இணையதளத்தில் தேர்ச்சி
சான்றிதழ் வெளியிடப்பட்டது.
தகுதி தேர்வு பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, டிஆர்பி
இணையதளத்தில் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சான்றிதழ்களை கலராக
(வண்ணம்) பிரின்ட் எடுத் துக் கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழை பதிவிறக்கம் செய்தவர்கள், அதில் ஏதாவது பிழைகள் இருப்ப தாக
அறிந்தால் டிஆர்பியை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 7 ஆண்டுகள் தகுதி உடையதாக
இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி
பெற்ற ஆசிரியர்கள், சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, வேலை வாய்ப்பு
அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த சான்றிதழ் தனியார்
பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றவும் ஏற்றுக்கொள்ளப்படும்.
Sir I make a mistake for download tet certificate.I have exceed my limit what is the solution tell me sir
ReplyDeleteSir I make a mistake for download tet certificate.I have exceed my limit what is the solution tell me sir
ReplyDelete