Home »
» TET புதிதாக நியமிக்கப்பட்ட 10,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி இன்று நடக்கிறது
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி
ஆசிரியர்கள் 20,500 பேர் கடந்த வியாழக்கிழமை பணியில்
நியமிக்கப்பட்டனர். பணி நியமனத்திற்கு எதிரான இடைக்கால தடை விலக்கப்பட்டதை
அடுத்து ஆசிரியர்கள் நியமனத்தை பள்ளி கல்வித்துறை முடித்தது.
அந்தந்த
மாவட்ட கல்வி முதன்மை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் ஆன்லைன் மூலமாக காலி
இடங்களில் பணி அமர்த்தப்பட்டனர். நியமன ஆணை பெற்ற ஆசிரியர்கள் மறுநாளே
பணியில் சேர்ந்தனர். பணியில் சேர்ந்த மறுநாள் முதல் காலாண்டு விடுமுறை
விடப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அக்டோபர் 6–ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. புதியதாக
நியமிக்கப்பட்ட 10,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பயிற்சி
அளிக்கப்படுகிறது. இன்று (30–ந்தேதி) மற்றும் 1–ந்தேதி ஆகிய 2 நாட்கள்
அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.
புதிய ஆசிரியர்கள், மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும், 6, 7, 8 ஆகிய
வகுப்புகளில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள கிரேடு முறைப்பற்றியும் 10–ம்
வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் கற்றுதல்
வேண்டும் என்று இதில் அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதேபோல
புதிதாக நியமிக்கப்பட்ட முதுநிலை ஆசிரியர்களுக்கும் பயிற்சி
அளிக்கப்படுகிறது. பிளஸ்–2 மாணவர்களுக்கு எளிதில் புரியக்கூடிய வகையில்
பாடம் நடத்தவும், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும் இந்த
பயிற்சியின்போது எடுத்துரைக்கப்படும். இதுபற்றிய சுற்றறிக்கை அனைத்து
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர
முருகன் அனுப்பியுள்ளார்.
First of all I want to clear that we all above 90 candidates are not against 5%relaxation candidates. We request the TN governement to increase the job (2013-2015) jobs in the second list. Because they only create the confusion. They have to resolve it without affect anyone. If they fill the all above 90 candidates in the second list no problem for 5% relaxation candidates now and future....
ReplyDeleteGood
ReplyDelete