Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PG முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான உண்டு உறைவிட பயிற்சி திட்டமிட்டபடி நடக்கும்!

               PG முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான உண்டு உறைவிட பயிற்சி திட்டமிட்டபடி நடக்கும்!

        ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 2174 முதுநிலை ஆசிரியர்களுக்கு  மதுரை உட்பட ஏழு மாவட்டங்களில் சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்.,29, 30 மற்றும் அக்.,1ல் பயிற்சிகள் நடக்கின்றன.
இதுகுறித்து மாவட்டங்களில் பயிற்சி நடக்கும் இடம் மற்றும் ஆசிரியர்கள் விவரம்:
மதுரை: அழகர்கோவில் மகாத்மா பள்ளியில், 178 வரலாறு ஆசிரியர்கள்.
திண்டுக்கல்: பாறைப்பட்டி ஆர்.வி. எஸ். பொறியியல் கல்லூரியில், 225 இயற்பியல் ஆசிரியர்கள்.
சேலம்: சின்னதிருப்பதி ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 219 வேதியியல் ஆசிரியர்கள்.
நாமக்கல்: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 317 
ஆங்கிலம் மற்றும் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் 191 தாவரவியல் ஆசிரியர்கள்.
விழுப்புரம்: சின்னசேலம் சிறுமலர் பள்ளியில் 283 கணித ஆசிரியர்கள்.
ஈரோடு: கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளியில் 178 விலங்கியல் ஆசிரியர்கள்
 மற்றும் வெங்கடேஸ்வரா பள்ளியில் 313 வணிகவியல் ஆசிரியர்கள்.
பயிற்சி விவரம் மற்றும் பங்கேற்கும் நேரம் குறித்த தகவல் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளன.

                         நேற்று முதல் தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையால் இன்று நடக்க இருந்த, அரசு டாக்டர்கள் நியமனத்திற்கான  போட்டித் தேர்வை, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், ரத்து செய்து உள்ளது.மேலும் இன்று பள்ளி மாணவர்களுக்கு நடக்க இருந்த ”தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு” தள்ளி வைக்கப்பட்டு 12.10.2014 அன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

           இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான 3 நாள் உண்டு உறைவிட பயிற்சி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் புதிய ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது. இது குறித்து பயிற்சி மைய ஏற்பாடுகளை செய்து வரும் அதிகாரி ஒருவரிடம் விசாரித்த போது ”தொலை தூர மாவட்டங்களில் உள்ள பலரும் நேற்றைய தினமே கிளம்பி விட்டனர்.  மேலும் பயிற்சி நடைபெறும் மையங்களுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து பயிற்சி மையத்திற்கு (ஒரு சில பயிற்சி மையங்களுக்கு மட்டும்) நேரடி போக்குவரத்து வசதிகளும் ஏறப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் போக்குவரத்து வசதி சீரடைந்து வருகிறது. பயிற்சியை நடத்த ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. மேலும் பயிற்சி ரத்து செய்வது குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வரவில்லை. அவ்வாறு வருமாயின் அதுகுறித்து முறையாக அறிவிக்கப்படும். எனவே பயிற்சி திட்டமிட்டபடி நடைபெறும்”. என தெரிவித்தார்.


      பாடவாரியாக ஏற்பாட்டளர்கள் தொடர்பு அலைபேசி எண்-

பாடசாலை தன்னார்வலர்கள் பட்டியல் - Click Here




1 Comments:

  1. Thanks For Ur Important Information sir... Super!!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive