தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை
பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900
முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட
உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி
உயர்நிலை பள்ளிகள் 300, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதில்,
ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு முதுகலை
ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்று விக்கப்பட்டன. தற்போது, இதனுடன்
தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும் கூடுதலாக முதுகலை
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த
ஜூலையில் நடந்த சட்டசபை கூட்டத்தில் 100 உயர் நிலை பள்ளிகள், மேல்நிலை
பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என ஜெ., அறிவித்தார். அதன் அடிப்படையில்
தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகள் பட்டியலை பள்ளி கல்வி துறை செயலர் சபிதா
வெளியிட்டுள்ளார். இந்த பள்ளிகளில் 100 தலைமை ஆசிரியர்கள், ஒன்பது முதுகலை
பட்டதாரி ஆசிரியர்கள் என, 900 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான
தேர்வு டி.ஆர்.பி., மூலம் விரைவில் நடக்க உள்ளது.
கல்வி துறை
அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், “அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை
சேர்ந்த 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இதில் ஒவ்வொரு பள்ளிக்கும்
புதிதாக தலா ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர் என
1000 காலி பணியிடம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி, மேல்நிலை
பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான புதிய ஆசிரியர்கள் டி.ஆர்.பி.,
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்,” என்றார்.
தகுதித்தேர்வு அறிவித்தபோதே ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டிருந்தால் இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டிறிக்காது.மாறாக தேர்வுஎழுதியபிறகு கால்ம் கடந்து வ்ழ்ங்கப்பட்டது.மேலும்,ஒரு g.o இரத்து செய்யப்படும்பொழுது அந்த தேதி முதலே அமலுக்கு வரும்.ஆனால் கல்வித்துறை இதையெல்லாம் அறிந்தும் அவசர்மாகப் பணிநியமணம் செய்துள்ளது .வியப்பைத்தருவதாக உள்ளது.உச்சநீதிமன்றம்பல வழக்குகளில் தீர்ப்பு வழங்க்கியுள்ளது.மேல் முறையீடு செய்யும்பொழுது ஆசிரியர்கள் பாதிப்படையவாய்ப்புகள் உள்ளதை கல்வித்துறை கவனத்தில் எடுத்ததாகத்தெரியவில்லை.அவசரமுடிவு ,பணிநியமனம் பெற்றவர்களின் எதிகால்ம் என்ன?
ReplyDeleteTotal pg vacancy only 900 or 900+
ReplyDeleteAduththa trbkkana result 2018layavathu viduvangala?
ReplyDelete900+1300(Approx)
ReplyDelete