கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சியே அடிப்படையாக இருக்கிறது. கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப்
பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை... ஆனால், தட்டச்சுப்
பயிற்சி பெற்றவர்கள் கணினியில் மிக விரைவாகச் செயல்பட முடிகிறது. இந்தத்
தட்டச்சுப் பயிற்சியினை இணையத்தில் எளிமையாகக் கற்றுக் கொள்ள ஒரு இணையதளம்
உதவுகிறது.
இந்த இணையதளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் என்று இரண்டு முக்கியப்
பிரிவுகளில் தட்டச்சுப் பயிற்சிக்கான வசதிகள் செய்யப்படிருக்கின்றன.
பொதுவான தட்டச்சுப் பயிற்சி பெற விரும்புபவர்கள் இத்தளத்தில் மாணவர்கள்
எனும் பிரிவில் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.
புதிய கணக்குத் தொடங்கப்பட்டவுடன் கிடைக்கும் பக்கத்தில் தொடக்கநிலைப் பயிற்சி (Beginner Course), இடைநிலைப் பயிற்சி (Intermediate Course), மேம்பட்ட பயிற்சி (Advanced Course), சிறப்புநிலைப் பாடங்கள் (Specialty Lessons), என பல தலைப்புகளில் பாடங்கள் உள்ளன.
தொடக்கநிலைப் பயிற்சியில் விசைப்பலகையிலுள்ள விசைகளைப் பயன்படுத்துவதற்கான ஒன்பது வகையான தொடக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பயிற்சிக்கு நாம் ஒவ்வொரு விசைக்கும் பயன்படுத்த வேண்டிய விரல்கள் குறித்தும், அதற்கான எழுத்துகள் குறித்தும் எளிமையாகப் படத்துடன் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
இடைநிலைப் பயிற்சியில் அகரவரிசை (Alphabet ), நிறுத்தல் குறிகள் (Punctuation), பொதுவான ஆங்கிலச் சொற்கள் (Common English Words), எண்கள் (Numbers), வேகப் பயிற்சி (Speed Drills) என்று ஒன்பது வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. மேம்பட்ட பயிற்சியில் ஆறு வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. சிறப்புப் பாடங்கள் பயிற்சியில் ஏழு வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.
கட்டண அடிப்படையிலான பயிற்சியில் 16 வகையான பயிற்சிகள் இருக்கின்றன. இவற்றில் நாம் கட்டண அடிப்படையிலான பயிற்சியைத் தவிர்த்து பிற பயிற்சிகளை இலவசமாகப் பெற முடியும். இங்கு ஆங்கிலம், ஜப்பான், சீனம், கொரியன், போர்ச்சுக்கீசு உட்பட 26 மொழிகளிலான விசைப்பலகைகளில் பயிற்சி பெறமுடியும்.
தட்டச்சுப் பயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள்http://www.typingweb.com/ எனும் இணையமுகவரிக்குச் சென்று தங்களது பயிற்சிகளைத் தொடரலாம்.
----------------------—-
ReplyDeleteமுக்கிய செய்தி
-------------------------
வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.
வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
நெல்லை 9543079848
கருர் 9894174462
கருர் 9597477975
நாமக்கல் 9003435097
கோவை 9843311339
தி.மலை 7305383952
சேலம் 9442799974
வேலூர் 9944358034
திருச்சி 9003540800
வாழ்க வளமுடன்.