ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில், 28 விரிவுரையாளர்கள், முதுநிலை விரிவுரையாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம், ஆன் ---- லைன் வழியில் நடந்த கலந்தாய்வில், 28 பேரும்,
பதவி உயர்வு செய்யப்பட்டனர். மேலும் சிலருக்கு, பணியிட மாறுதல்
உத்தரவுகளும் வழங்கப்பட்டன. இதற்கான உத்தரவுகளை, இயக்குனர் கண்ணப்பன்
வழங்கினார்.
கம்ப்யூட்டர் ஆசிரியர்: பள்ளி கல்வித் துறையில், 827 கம்ப்யூட்டர்
ஆசிரியரை, பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய, தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், இதற்கான
அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கம்ப்யூட்டர் கல்வி மற்றும் பி.எட்., பட்டம் பெற்றவர்களில், பதிவு மூப்பு
தகுதி கொண்டவர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம்
செய்யப்படுவர். இதற்கான பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் துவங்கும்
என, கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...