அன்புள்ள பாடசாலை வாசகர்களே,
வணக்கம். நமது பாடசாலை வலைதள வாசகர்களுக்காக Cell Phone, Tablet தொழில்நுட்பங்கள் சார்ந்த கட்டுரை தொடர்ந்து வெளியிட உள்ளோம்.
நம் பாடசாலை வாசகர்களுக்காக இக்கட்டுரையை தொழில்நுட்ப வல்லுனர் திரு.பா. தமிழ் அவர்கள் பிரத்யோகமாக எழுத உள்ளார். இக்கட்டுரையில் அடிப்படை தொழில்நுட்பம் முதல் இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் வரை எளிய தமிழில் விளக்க உள்ளார். தொடர்ந்து அலைபேசி மற்றும் டேப்ளட் கணிணி சார்ந்த வாசகர்களின் சந்தேகங்களுக்கும் விடையளிக்க உள்ளார். எனவே பாடசாலையின் வாசகர்கள் இப்புதிய பகுதி தொடர்பான தங்கள் சந்தேகங்களை கீழே உள்ள கமெண்ட் பாக்சில் பதிவு செய்யலாம். அவற்றிற்கும் தொழில்நுட்ப வல்லுனர் தனது கட்டுரையில் பதில்களை பகிர்வார்.
அறிமுக கட்டுரை - 1
அலைபேசி
பாடசாலை வாசகா்களுக்கு வணக்கம். அலைபேசி
தொடா்பான இப்பகுதியை எழுத அழைத்த இவ்வளைதளத்தின் நிறுவனருக்கு நன்றி. 1876ல்
அலெக்சாண்டா் கிரகாம் பெல் உருவாக்கிய முதல் தொலைபேசியானது பெரிய மாற்றங்கள் இன்றி
சில நூற்றாண்டுகள் (இன்றும்) பயன்பாட்டில் இருந்தது (இருக்கிறது). ஆனால் 21ஆம் நூற்றாண்டின்
துவக்கத்தில் வணிக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்த செல்போன்களின் இன்றைய வளா்ச்சியை யாராளும்
இன்று அளவிட முடியாது.
வாய்
பேச்சிற்காக உருவாக்கப்பட்ட செல்போன்களில் குறுந்தகவல் சேவை, படதகவல் சேவை, சிறிய அளவிலான
விளையாட்டுகள் எனத் துவங்கி வண்ணத்திரை, டிஜிட்டல் கேமரா, இணைய வசதி, பல்ஊடக தகவல்
வசதி, வீடியோ மற்றும் இசை கேட்டுகும் வசதி, இணைப்பின்றி தகவல்களை பரிமாறும் வசதி, தொடுதிரை
வசதி, இருப்பிடத்தை அறிய உதவும் வசதி, வெப்பநிலை, உயரம் மற்றும் அழுத்தம் போன்றவற்றை
அளக்க உதவும் வசதி, வங்கி பரிவா்தனைகளை செய்யும் வசதி, முகம் பார்த்து பேசும் வசதி,
கணிப்போறிக்கு இணையாக மென்பொருட்களை இயக்கும் வசதி என நாளுக்கு நாள் செல்போன்களின்
பயன்பாடும் தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சரி
மேற்கண்ட தகவல்கள் நாங்கள் அறிந்ததே. இப்பகுதியில் புதிதாக என்ன தெரிந்து கொள்ளவிருக்கிறோம்
என நீங்கள் நினைப்பது புரிகிறது. அனைவராலும் பயன்படுத்தப்பட்டாலும், இன்றும் சராசரி
மக்களுக்கு தங்கள் செல்போனில் என்னென்ன சேவைகள் (வசதிகள்) உள்ளன. அவற்றை நம் தேவைக்கும்,
நம் சூழ்நிலைக்கும் எவ்வாறு பயன்படுத்தலாம்?
டியுள்
கோர், க்வாட் கோர் ப்ராசஸா், மீடியா என்ஜின், 2ஜி, 3ஜி, 4ஜி, ரேம், ரோம், இயங்குதளம்
(விண்டோஸ்(7.5, 8.0, 8.1), ஆண்டராய்டு (ஜிஞ்சா் ப்ரெட், ஐஸ் க்ரீம் சான்விச், ஜெல்லி
பீன், கிட்காட் மற்றும் ஆண்டராய்டு ஒன்), ஐ-ஓ.எஸ்(4.0, 5.0, 6.0, 7.0), ஆப்கள், ஜிபிஎஸ்,
எ-ஜிபிஎஸ், வை-பை, வை-பை டைரைக்ட், பை-பை ஆட்-ஸ்பாட், டெத்தரிங், சார் வேல்யு, ப்ளுடூத்4.0,
என்.எப்.சி, எல்.இ.டி, ஐ.பி.எஸ், சூப்பா் ஆமலாய்டு, கொரில்லா க்ளாஸ், மல்டி டச், கெஸ்ச்சா்,
பிராக்சிமிட்டி சென்சார், ஆசிலரோ மீட்டா், கைரோ ஸ்கோப், ஜியோமேக்னடிக் சென்சார், ஜியோ
டேக்கிங், என்.எப்.சி போன்ற தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் என்னென்ன? இவற்றின் முந்தைய
பதிப்பில் இருந்து இவற்றின் வேறுபாடுகள் மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன? உங்கள் தேவைக்கான
செல்போன் எது, உங்கள் பட்ஜெட்டிற்கான செல்போன் எது? என்பன போன்ற, உங்கள் மனதை குழுப்பும்
கேள்விகளுக்கு விடை அறிய உதவுவதே இப்பகுதியின் நோக்கம்.
விரைவில் அடுத்தடுத்த கட்டுரைகளில் சந்திப்போம்...
நட்புடன் - கட்டுரை ஆசிரியர் திரு. பா. தமிழ், காஞ்சிபுரம்.
how to install tamil fonts in moto E? the emails containing tamil fonts are not in readable format. the "FONT INSTALLER" is unable to install a tamil font in system>font area.. Resolve this problem of many android users.
ReplyDeleteபிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு
Deleteமுதல்வரும் , ஓ பி பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனை . இன்னும் 5 நிமிடத்தில் தீர்ப்பு
Delete3 மணிக்கு தீர்ப்பு - தற்போதய தகவல்
Deleteஅ தி மு க தலைமை அலுவலகம் "கரு####தி கொடும்பாவி எரிப்பு"..
Deleteகோபாலபுரம் - உற்சாகபுரம்
மீண்டும் ஓ பி யிடம் முதல்வர் ஆலோசனை
ஜெயலலிதா அவர்கள் குற்றவாளி...
Deleteதற்போதய முதல்வர் முன்னாள் முதல்வர் ஆக போகிறார் . ...
தமிழகம் முழுதும் அ தி க மு வினர் கலவரம் , பஸ் ,கடை உடைப்பு ..
Deleteஓடி ஒழியும் பொது மக்கள் ...
கலவரக்காரர்களை உடனடியாக அடக்கி பொது மக்களை காக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
sir i am using samsung galaxy s3 without using my phone my battery was drying nearll 70% at evening how save the battery life then another doubt which is best antivirus for my android phone
ReplyDeleteby murugesan
வணக்கம். உங்கள் போனில் பயன்படுத்தாத நேரங்களில் வை-பை, புளுடூத், டேட்டா, ஸ்கிரீன் ரொட்டெஷன், சிங்க் மற்றும் ஜிபிஎஸ் போன்ற சேவைகளை அணைத்து வையுங்கள். டிஸ்பிளே பிரைட்னஸையும் 50சதவீதம் அளவில் வையுங்கள். லவுட் ஸ்பீக்கா் பயன்பாட்டினைக் குறைத்து, ஹெட்போனினை பயன்படுத்துங்கள். லைவ் வால்பேப்பா்களை நீக்கி, நிலையான (அசையாத) வால்பேப்பா்களை பயன்படுத்துங்கள். தினமும் போனினை குறைந்தது நான்கு மணிநேரங்களாவது சார்ஜ் செய்திடுங்கள். சில நிமிடங்களில் உங்கள் போன் சார்ஜ் ஆகிவிட்டது என்று தகவல் வந்தாலும் நம்பாதீா்கள். பயன்படுத்தாத ஆஃப்களை மினிமைஸ் செய்யாமல், க்ளோஸ் செய்யுங்கள்.
Deleteவங்கி பயன்பாடு செய்யாத போன்களுக்கு ஆண்டி வைரஸ் மென்பொருட்கள் தேவையற்றது. உங்கள் பேட்டரியின் விரைவான இழப்பிற்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பெரும்பாலான ஆண்டி வைரஸ் மென்பொருட்கள் உங்கள் போனின் நினைவகம் மற்றும் பிராசஸிங் திறனினை அதிகம் பயன்படுத்தி, போனின் பிற செயல்பாட்டின் வேகத்தினைக் குறைக்கும். உங்கள் போனினை கணினியுடன் இணைக்கும் சமயங்களில் மட்டும் கவனம் தேவை. நீங்கள் இணைக்கும் கம்பியுட்டரில் வைரஸ் இருப்பின் அது உங்கள் மெமரி கார்டினைத் தாக்கும். நன்றி.
1.How to read Tamil text without rooting ? Same. Udayakumar question .
ReplyDelete2.digitizer means?
3.my canvas 4 phone has broken. But still I use the" touch".it means the glass only broken or touch broken? What will I cjange?
தமிழ் ஃபாண்டிற்கான தீா்வு விரைவில் வீடியோவாக வெளியிடப்படும். சில நாட்கள் காத்திருக்கவும்.
DeleteNokia . Lomina520 il andraied soft wear how will install
ReplyDeleteமன்னிக்கவும். உங்கள் போனில் விண்டோஸ் போனுக்கான மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்த இயலும். ஆண்டிராய்டு மென்பொருட்கள் பொருந்தாது. நீங்கள் விரும்பும் ஆஃபின் பெயரை நோக்கியா ஸ்டோரில் தேடிப்பாருங்கள்.
DeleteAnother one same nokia lum520. How will install Tamil font and downlod pic,vidio save
ReplyDeleteதமிழ் ஃபாண்டிற்கான தீா்வு விரைவில் வீடியோவாக வெளியிடப்படும். யு டியுப் டவுண்லோடா்களை பதிவிறக்கி பயன்படுத்துங்கள். வலைப்பக்கங்களில் போட்டோக்களை பதிவிறக்கம் செய்ய, தேவையான போட்டோவினை திறந்து, உங்கள் ஆப்ஷன் பட்டணை க்ளிக் செய்து, சேவ் ஆஸ் ஆப்ஷனினை பயன்படுத்துங்கள். அல்லது விரலால் சில நொடிகள் தொட்டுக் கொண்டிருங்கள். இதனால் தோன்றும் ஆப்ஷன் பகுதியில் சேவ்வினை தோ்வு செய்யுங்கள். (சில வலைதளங்களில் சேவ் செய்யும் வசதி தடை செய்யப்பட்டிருக்கும்)
DeleteIGNOU BEd Entrance 2014 Key answers published in www.TrbTnpsc.com
ReplyDeleteVisit it.
1.oru smart phone vangum bothu basica enna enna features parthu vanganum. 2.what is the difference between ram and rom in cell phones.
ReplyDeleteஅடுத்தாக வெளியாக உள்ள பகுதிகள் உங்களுக்கு பெரிதும் உதவும். சில நாட்கள் காத்திருக்கவும். நன்றி
DeleteWHICH MOBILE IS BEST? ANDROID OR WINDOWS PHONE.
ReplyDeleteநான் எனது கணினியில் கூகுள் குரோம் மூலமா பாடசாலை வலைதளத்தை பார்க்கும்பொழுது 4 அல்லது 5 விளம்பர விண்டோக்கள் வந்து திரையை மரைக்கின்றன். அதை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என கூறவும். நன்றி.
ReplyDeleteஎங்கள் வாழ்வில் ஒளியேற்றிய அம்மாவிற்கு இன்று நல்ல தீர்ப்பு கிடைக்க எங்கள் குலதெய்வ கோவிலில் குடும்பத்தோடு வேண்டிக்கொண்டிருக்கிறோம். எங்கள் தீர்ப்பு வந்ததும் கம்பீரமாக சிங்கம் போல் தமிழகம் திரும்ப இறைவனை வேண்டுகிறோம்.
ReplyDeleteஎங்களது இதயத்தில் குடியிருக்கும் அம்மாவிற்கு எந்த நாளும் வெற்றியே....
__/\__
அ தி மு க வினர் மீது பெங்களூரு ல் தடியடி
Deletevanakkam sir, how copy text from fb to whatsApp.
ReplyDeleteவிரலால் தொடா்ந்து சில விநாடிகள் எழுத்தை தொட்டுக் கொண்டிருக்கவும். இதனால் தோன்றும் டூல்களில் காப்பியினைத் தோ்வு செய்யுங்கள்.
DeleteSir vanakkam:
ReplyDeleteNaan puthusa oru tab vanginen athil athiga nwram game vilaiyadiya piragu off seithen thirumba on seithal athu on agavillai piragu mobile shopirkku kondu sentren anga software poiduchinnu sonnanga ok off ana tab or mobilla eppadi software podurathu pls answer.
I am using lenova android.how to install tamil font in it.i tried wps software but it went another link(openid).how to rectify it.please explain
ReplyDelete