Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆண்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுவது ஏன்?

            நடுத்தர வயதினை அடையும் ஒரு மனிதன் பல ஆரோக்கிய குறைவுகளுக்கு ஆளாகின்றான். ஆய்வு கூறும் உண்மையானது கல்யாணம் ஆன ஆண்களைக் காட்டிலும் கல்யாணம் ஆகாத ஆண்கள் அதிக நோய்களுக்கு ஆளாகின்றனர் என்பது தான்.
 
          திருமணம் ஆனவர்களுக்கு குடும்ப பந்தம் என்ற காரணம்அவர்களை உடல் நலனை காக்கின்றதாம். திருமண ஆகாத ஆண்கள் முறையான உணவு எடுத்துக் கொள்வதில்லை. முறையான ஆர்வத்தினை வாழ்வில் கொள்வதில்லை.
 
                அநேக ஆண்களுக்கு இது நோயில் கொண்டு முடிகின்றது. 25 வயதில் திருமணம் புரிபவர்கள் அதற்கு முன் குறைந்த வயதில் திருமணம் புரிபவர்களை விட அதிக காலம் வாழ்கின்றனர் என ஆய்வு கூறுகின்றது. கணினி, மடிக்கணினி, செல்போன், செல்போனில் விளையாட்டு என நீண்டு கொண்டே செல்லும் நவீன உபயோகப் பொருட்கள், போதைப் பொருட்கள் போன்ற ஒரு அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தி விடுவதாக மன நல மருத்துவர்களால் கருதப்படுகின்றது.
 
          இவர்கள் இயற்கையை விட்டு அதிகம் பிரிந்தே இருக்கிறார்களாம். இன்றைய .டி. இளைஞர்கள் 11 மணி நேரத்திற்கம் மேலாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்கின்றனர். இவர்களுக்கு உடல் ரீதியான ஆபத்தான பாதிப்புகள் 40சதவீதம் கூடி விடுகின்றது.
 
               இவர்கள் மணிக்கு ஒரு முறை எழுந்து ஐந்து நிமிடமாவது நடந்து பிறகு வேலையைத் தொடருவது நல்லது. 45 வயதினை நெருங்கும் ஆண்களை அதிகம் வெய்யிலில் செல்லும் பொழுது `ஹிக்ஷி' கதிர் கூடுதலாக தாக்குகின்றனவாம். இவர்கள் சரும மருத்துவர் ஆலோசனைப்படி `க்ரீம்' பயன்படுத்துவது நல்லது. ஆண்களின் வயது கூடும் பொழுது அசதி, தூக்கம் இவற்றினால் வாகன விபத்துகள் கூடுகின்றது. என்றாலும் படு துடிப்பான இளைஞர்களின் கண் மூடித்தனமான வேகத்தினைக் காட்டிலும் இவர்களே மேல் என ஆய்வுகள் கூறுகின்றன.
 
             சில ஆண்களுக்கு 65 வயதினை கடக்கும் பொழுது தற்கொலை எண்ணம் கூடுகின்றதாம். முதுமையின் வெளிப்பாட்டினை உணர முடியாமல் மன உளைச்சல் பெறும் இவர்கள் மருத்துவ சிகிச்சையின் மூலம் மிக நல்ல முன்னேற்றத்தினை அடைய முடியும்.

                      புகை பிடிக்கும் ஆண்கள் பக்கவாத பாதிப்பில் இருக்கும் எண்ணிக்கை இரு மடங்காக இருக்கின்றது. இவர்கள் எந்த நிமிடம் புகை பிடிப்பதை விடுகின்றார்களோ அந்த நிமிடத்திலிருந்தே இந்த அபாயம் குறையத் தொடங்குகின்றது
.




1 Comments:

  1. 1)20minites walking 2)4liters drinkingwater
    All is well

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive