வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அண்மையில் உயர்த்திய தேர்வுக் கட்டண உயர்வை, வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய மாணவர்
சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
2002 ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இப்போது, காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் இயங்கி வருகிறது.
இப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர்,
விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 115 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
இயங்கி வருகின்றன.
இக் கல்லூரிகளில் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் ஏழை-எளிய கிராமப்புற
மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் இப் பல்கலைக்கழகம் தனது தேர்வுக் கட்டணத்தை இரு
மடங்காக உயர்த்தி உள்ளது.
முன்பு, இளங்கலை படிப்பு தாள் ஒன்றுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.45,
முதுகலைப் படிப்பு தாள் ஒன்றுக்கு ரூ.75, மதிப்பெண் சான்றிதழ் பெற ரூ.25,
செய்முறைத் தேர்வுக்கு ரூ.100, தேர்வு விண்ணப்பத்துக்கு ரூ.25 என்று
கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.
இந்த கட்டணங்களில் இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இளங்கலை படிப்பு
தாள் ஒன்றுக்கான தேர்வுக் கட்டணமாக ரூ.85, முதுகலைப் படிப்பு தாள்
ஒன்றுக்கு ரூ.150, மதிப்பெண் சான்றிதழ் பெற ரூ.75, செய்முறைத் தேர்வுக்கு
ரூ.180, தேர்வு விண்ணப்பத்துக்கு ரூ.50 என்று உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் "ஏழை-எளிய மாணவ-மாணவியரை பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள
இந்த கட்டண உயர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் துரித நடவடிக்கை
எடுக்க வேண்டும்' என்று இந்திய மாணவர் சங்க திருவண்ணாமலை மாவட்டத் தலைவர்
கோ.சிலம்பரசன், மாவட்டச் செயலாளர் ந.அன்பரசன் ஆகியோர் அறிக்கை மூலம்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் நாட்டில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி
ReplyDeleteதாய் மொழி தமிழில் அல்ல தமிழையே பாடமாக படித்தவர்களுக்கு பதவி வாய்ப்பு இல்லை .
1. காலி பணியிடங்கள் 66% பதவி உயர்வின் மூலம் நிரப்ப படுகிறது .
2. ரோஸ்டர் முறையில் தமிழ் மொழிக்கு கடைசி இடம் .
3. ஆசிரியர் மாணவர்கள் விகிதாசாரம் 1: 45 என்பது தமிழுக்கு மட்டுமே ?
4. தமிழ் மொழியில் வாசிப்பு திறன் குறைவாய் உள்ளதற்கு காரணம் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையே .
5. அனைத்து CBSC பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என அரசு அறிவிப்பு .
மேற்கண்ட அனைத்து காரணங்களை வலியுறுத்தி காலி பணியிடங்களை அதிகரிக்க வழக்கு தொடர உள்ளோம் . மற்ற பாட பிரிவை சேர்ந்த ஆசிரியர்களும் வழக்கு தொடர உள்ளார்கள் .
மேற்கண்ட காரணங்களை பற்றிய அதிக விவரங்கள், அரசு G O , தகவல்கள் தங்களிடம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளவும்
இந்த வாய்ப்பை தவற விட்டால் 90 மதிப்பெண் பெற்ற நாம் எப்பொதும் பணி பெற இயலாது .
சட்டத்தால் மட்டுமே இழந்த நம் பணி வாய்ப்பை மீண்டும் பெற முடியும்,
இது பற்றிய அறிவிப்பு சில தினங்களில் வெளி வரும்.
அனைவரும் தங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண்களை SMS முலம் பதிவு செய்து கொள்ளவும் ( தொடர்பு கொள்பவர்கள் நிறைய இருப்பதால் அனைவருடனும் பேச முடியாத காரணத்தினால் )
தொடபுக்கு :
சேலம் -- தருமபுரி -- கிருஷ்ணகிரி : 7598000141
புதுக்கோட்டை : 9943228971
வேலூர் : 7220724755
திருவண்ணாமலை :7639497834